சென்னை அண்ணா நகரில் இளைஞர்கள் சிலர் கார் ரேஸில் ஈடுபட்டபோது சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த சொகுசு காரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சென்னை அண்ணாநகர் இரண்டாவது அவென்யூவில் நேற்று நள்ளிரவு இரண்டு கார்கள் ரேஸில் ஈடுபட்டுள்ளது. மின்னல் வேகத்தில் கார்கள் சென்றுக்கொண்டிருந்தபோது, இதில், ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கரெண்ட் டிரான்ஸ்பார்மில் மோதி சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்தது. அப்போது, அங்கிருந்த கடையின் செக்யூரிட்டி காயமடைந்தார்.
விபத்தை ஏற்படுத்தியவர்கள் விபத்து நடந்த காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் தப்பிச் சென்றனர். உடனே, அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு விபத்து தொடர்பாக தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தை நடந்த பகுதியை பார்வையிட்டனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், விபத்து ஏற்படுத்திய கார் சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கார் என்று தெரியவந்தது. அந்த காரை அவரது மகன் ராஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரேஸ் ஓட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. தப்பி ஓடியவர்களையும், ரேஸில் ஈடுபட்டவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
சென்னையில் நேற்றுமுன் தினம் இதேபோல் ஒரு விபத்து சம்பவம் நடந்தது. சாலையில் வேகமாக வந்த கார் சாலையோரத்தின் இருக்கு பழவியாபாரியின் வண்டியின் மீது மோதியது. இதில், அந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் சமீபகாலமாக சாலைகளில் கார்கள் வேகமாக ஓடுவதை பார்க்கலாம். ஆடம்பர கார்கள் வைத்திருப்பவர்கள் பெரிய சாலைகளில் மட்டுமல்லால், சின்ன சின்ன தெருவில் கூட மிகவும் வேகமாக செல்கின்றனர். இதனால், பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு அதனால், சாலையில் இருப்போர், செல்வோர் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தி செல்போன் பறிக்க முயன்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்