தமிழ்நாடு:
- 18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் 50 % இலக்குகளை அடைந்துள்ளோம் : தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தகவல்
- தெரு ஓரங்களில் போஸ்டர் ஒட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம், வேட்பாளர் செலவிலும் சேர்க்கபடும் : மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங்கு பேடி தகவல்
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது : 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
- குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வு தேதி இன்று அறிவிப்பு : சுமார் 6 ஆயிரம் பணி இடங்களை நிரப்ப முடிவு
- அரியலூர் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமெனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினர் மீது புதிய மோசடி வழக்கு பதிவு
- நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா :
- லக்கிம்பூர் வழக்கு: ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
- தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
- மலையாள நடிகர் பிரதீப் கோட்டயம் (நேற்று) வியாழக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் காலமானார்.
- காவேரி-கோதாவரி-பெண்ணாறு- கிருஷ்ணா ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
உலகம்:
- பிரேசில் நாட்டில் 90 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெய்த கனமழை காரணமாக உயிரிழப்பு 104 ஆக உயர்வு
- உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொண்டதாக ரஷ்யா ஏமாற்றுகிறது. எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க கூடும் - அமெரிக்கா எச்சரிக்கை
- ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள லிட்டில் பே கடலில் நீச்சல் அடித்த ஒருவரை சுறா தாக்கி உயிரிழப்பு
- இஸ்ரேலில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
- வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அரசு அறிவிப்பு
விளையாட்டு:
- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யரை எடுக்காதது பற்றி இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
- சவுராஷ்ட்ரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் சதமடித்து அஜிங்கிய ரஹானே அசத்தல்
- இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்