Lok Sabha Electon 2024 Result: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரலாற்றில் இதுவரை, மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 10 பேர்ன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள மக்களவை தேர்தலில், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் வெற்றிக்கு ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.


10. மேவா சிங்:


கடந்த 1984ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் சிரோமனி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட மேவா சிங் 140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


9. பியாரே லால் சங்க்வார்:


கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் கதம்பூர் தொகுதியில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட பியாரே லால் சங்க்வார் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


8. ராமாயன் ராய்:


கடந்த 1980ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் தியோரியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ராமாயன் ராய் 77 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


7. பூக்குன்ஹிகோயா


கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், லட்சத்தீவு தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட பூக்குன்ஹிகோயா 71 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


6. ரிஷாங்:


கடந்த 1962ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மணிப்பூர் மாநிலம் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் சோசலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ரிஷாங் 42 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


5. துப்ஷ்டன் செவாங்:


கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், லடாக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட துப்ஷ்டன் செவாங் 36 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


4.  எம். எஸ். சிவசாமி:


கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மாநிலம் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ். சிவசாமி 26 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


3. கெய்க்வாட் சத்யஜித்சிங்


கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், குஜராத் மாநிலம் பரோடா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கெய்க்வாட் சத்யஜித் சிங் 17 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


2. சோம் மரண்டி:


கடந்த 1998ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பீகார் மாநிலம் ராஜ்மஹால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சோம் மரண்டி 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


1. கனதல ராமகிருஷ்ணா:


கடந்த 1989ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ஆந்திர மாநிலம் அனகாபள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கனதல ராமகிருஷ்ணா 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.