Krishnagiri Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் சார்பில் கே.கோபிநாத் 3,93,603 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.
பாஜக சார்பில் நரசிம்மன் - 1,70,208
அதிமுகக சார்பில் ஜெயப்பிரகாஷ் - 2,40,687
நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யா வீரப்பன் -84,014
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. அதன்படி, கிருஷ்ணகிரியில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்களும் & வேட்பாளர்களும்:
ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் என, மொத்தம் 16 லட்சத்து 23 ஆயிரத்து 179 வாக்காளர்களை கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத், பாஜக சார்பில் நரசிம்மன், அதிமுகக சார்பில் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யா வீரப்பன் ஆகியோர் போட்டியிட்டனர்.
பதிவான வாக்குகள் விவரம்:
தேர்தல் ஆணைய தரவுகளின்படி கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் 16 லட்சத்து 23 ஆயிரத்து 179 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில், கிருஷ்ணகிரி தொகுதியில் 71.50 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதாவது ஆண் வாக்காளர்களில் 71.11 சதவிகிதம் பேரும், பெண் வாக்காளர்களில் 70.90 சதவிகிதம் பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 25.90 சதவிகிதம் பேரும் மட்டுமே வாக்களித்தனர்.
கடந்த தேர்தல் விவரம்:
- காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்லகுமார் 6,11,298 (52.60%) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்
- அதிமுகவைச் சேர்ந்த கே.பி. முனுசாமி 4,54,533 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்
- நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதுசூதனன் 28 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா?
ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் திட்டம் என்பது 82 ஆண்டுகளாகவே கோரிக்கையாகவே தொடர்கிறது. ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம், ஓசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி இடமாற்றம். அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை, உலகளவில் மா ஏற்றுமதி மையம், புளி பதப்படுத்த குளிர்பதன கிடங்கு, ஆவின் மேம்பாலத்தில், சென்னை, சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கும் வகையில் உயர் மட்ட வட்ட சாலை, அஞ்செட்டியில் தொட்டல்லா அணை உள்ளிட்ட கோரிக்கைகள் கடந்த தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டு தற்போதும் நிறைவேற்றப்படாத அறிவிப்புகளாகவே உள்ளன.
இதனை புதியதாக வெற்றி பெறவிருக்கும் எம்.பி. நிறைவேற்றுவாரா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.