கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி அளித்துள்ளார். 


கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக 43 சதவிகித வாக்குகள் பெற்று காங்கிரஸ் சுமார் 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் நேரடியாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வரும் சூழலில், காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக  தேர்ந்தெடுக்கப்பட இருப்பது யார் என்பது தொடர்பான கேள்வியும் எழுந்துள்ளது. 


இந்நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி அளித்துள்ளார். 



இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடையே கூறும்போது,  ''இது பொதுமக்களின் வெற்றி. மோசமான நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எங்களின் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக வேலை பார்த்துள்ளனர். மக்கள் எங்களின் வாக்குதிகளுக்காக வாக்கு அளித்துள்ளனர். 


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களையும் இன்று மாலை பெங்களூரு வருமாறு கூறியுள்ளோம். கட்சி தலைமை, நிர்வாகிகளை அனுப்பிய உடன் அடுத்தகட்டப் பணி தொடங்கும். இந்தக் கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்று தீர்மானிக்கப்படும்'' என்று கார்கே தெரிவித்தார்.