கண்ணீரோடு நின்றபோது கரம் நீட்டாத பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி பேசினார்.




இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியில் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படும்


கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி "மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுக்கிறேன் என கூறிவிட்டு கேஸ் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்து வருகிறார்கள். பெட்ரோல் டீசல் விலை இரண்டு மடங்கு மூன்று மடங்காக இன்னைக்கு அதிகமாகிறது. அதனால் தான் தேர்தல் அறிக்கையில் சாதாரண சாமானிய மக்கள் பயன்பெற வேண்டும் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கும் டீசல் விலை 65 ரூபாய்க்கும் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது இது பயன்பாட்டிற்கு வரும். மேலும் நாம் செய்த மற்ற சாதனைகள் ஆன உயர் கல்வி படிக்கக்கூடிய பெண்களுக்கு எதிர்காலத்திற்காக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப் பெண் திட்டம் மகளிருக்கு இலவச பேருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்று அறிவித்து இன்று ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மேல் நம்முடைய சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்த திட்டத்தை முதலமைச்சராக அவர்கள் நமக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.




பிரதமருக்கு தேர்தல் காய்ச்சல்


நான் வாரத்திற்கு நான்கு நாட்கள் தூத்துக்குடியில் இருக்கிறேன் என சொன்னார்கள். ஆனால் தற்போது பிரதமர் அவர்கள் தற்போது தமிழ்நாட்டில் தான் வாரத்தில் மூன்று நாட்கள் இருக்கிறார்கள். எங்கே இருக்கிறார் என்று பார்த்தால் அவ்வளவு நாள் நாடாளுமன்றத்திற்கு கூட வராத பிரதமர் தமிழகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார். ஏனென்றால் தேர்தல் காய்ச்சல் வந்து விட்டது. அதனால் வந்து கொண்டே இருக்கிறார்.




பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்


எங்களுடைய மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டபோது வீடுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருந்தபோது மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல ஒரு முறையாவது மோடி வந்தாரா? தமிழகத்தில் கொடுக்கப்பட்ட அத்தனை நிவாரணத்தையும் கொடுத்தது தமிழக முதல்வர் ஸ்டாலின்தான். ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன் நாங்கள் கண்ணீரோடு நின்று போது கரம் நீட்டாத பாஜகவிற்கு தங்களுடைய விரலை நீட்டி வாக்களிக்க மாட்டார்கள் என்பதை புரிய வைக்க வேண்டும்” என்றார்.