காஞ்சிபுரம் மாநகராட்சியில்  நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 9வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மகாலட்சுமியை ஆதரித்து கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு,பாண்டவ பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்.






வாக்கு சேகரிப்பின் போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இளைஞர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குத்தாட்டம் நடனமாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

 

காஞ்சிபுரம் மாநகராட்சி

 

 

தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று  நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சியினர்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி , மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு  முதன்முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மேயர் பதவியை குறி வைத்து பெண் வேட்பாளர்களை அரசியல் கட்சியினர் களமிறக்கியுள்ளனர்.



முதன்முறையாக தேர்தலில் களம்காணும் அதிமுக ,திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர்கள்  காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமைக்குரிய வரலாற்றில் இடம்பிடிக்க போட்டா  போட்டுக்கொண்டு வாக்காளர்களை கவர பட்டு நெசவு செய்தும், தையல் கடையில்  துணிகளுக்கு தையல் தைத்து கொடுத்தும், டீக் கடைகளில் டீ போட்டு கொடுத்தும், உணவகங்களில் பூரி மாவை திரட்டிக் கொடுத்தும்,ஆம்லெட் போட்டுக்கொடுத்தும், காய்கறி,மளிகைக் கடைகளில் விற்பனை செய்தும் என பல்வேறு யுக்திகளை தங்களது பிரச்சாரத்தின் போது பயன்படுத்தி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து  வருகின்றனர்

 

 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர






 





ட்விட்டர் பக்கத்தில் தொடர