காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் அடங்கியுள்ளது. இதில் 54 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இன்று மனுக்கள் வாபஸ் பெற்ற நிலையில் கட்சிகளுக்கான ஒதுக்கீடு நடைபெற்றபோது அதிமுகவை சேர்ந்த பாலமுருகன் மற்றும் மாபுப்பாஷா ஆகிய இருவரும் தாக்கல் செய்திருந்த நிலையில் இருவரும் வாபஸ் பெற மறுத்ததால் இருவருக்கும் தேர்தல் ஆணைய விதிகள்படி சின்னங்கள் ஒதுக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.போட்டி காரணமாக இருவரும் முரண்டு பிடித்ததால் வாலாஜாபாத் 15வது வார்டில் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக உதயசூரியன், தாமரை மட்டுமே போட்டியிடுகிறது. போட்டி காரணமாக 15 வார்டில் இரட்டை இலை சின்னம் அம்பேலானது.
இதுகுறித்து அக்கட்சி வட்டாரத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அதிமுகவின் அப்பகுதி நிர்வாகியாக இருந்து வரும் மாபுப்பாஷாவிற்கு சீட்டு ஒதுக்கப்பட்டது. இதனால் மாற்று வேட்பாளராக அவருடைய மகன், சாதிக் பாஷா மற்றும் பாலமுருகன் ஆகியோர் வேட்பாளராக மனு தாக்கல் செய்தனர். ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டால் வேறு ஒருவர் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக மாற்று வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். மாற்று வேட்பாளராக களமிறக்க பட்டவர்களுக்கும் கட்சி சார்பில் கொடுக்க வேண்டிய படிவங்கள் மற்றும் சின்ன அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் படிவத்தை பூர்த்தி செய்த போது தாங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக களம் இறங்குவதாக தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் அவர்களுடைய மனுக்கள் ஏற்கப் பட்டது. மாற்று வேட்பாளராக களம் இறங்கும் அவர்கள் வாபஸ் பெரும் நாளன்று பொதுவாக வாபஸ் பெறுவது வழக்கம். சிலர் சீட் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டொரு நாட்களில் சமாதானம் செய்யப்பட்டு யாராவது ஒருவரை வாபஸ் செய்ய வைத்து விடுவார்கள்.
ஆனால் வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வது வார்டில் போட்டியிடும் இரண்டு தரப்பினரையும் கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து பலமுறை பேச்சுவார்த்தை செய்தும் இருவரும் மௌனம் சாதித்து வந்துள்ளனர். விடாப்படியாக இருவரும் போட்டி போட்டு ஆகவேண்டும் என கூறிவந்த நிலையில் ஒரே சின்னத்தை ஒதுக்க முடியாததால் இருவருக்கும் சுயச்சை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போட்டியிடும் பிற கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக அமையும் என தெரிவித்தனர். இப்பொழுது பாலமுருகனுக்கு மறை திருக்கி , மாபு பாஷா பாட்ஷா விற்கு உலக உருண்டையும் சின்னமாக வழங்கப்பட்டுள்ளதுவிற்கு உலக உருண்டையும் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது.