ஜெயலலிதா மகள் என்று சொல்லும் பிரேமா என்ற ஜெயலட்சுமி தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டுவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்.




மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  திடீரென வந்த ஜெயலலிதா மகள் எனக்கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி.


வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுவை தாக்கல் செய்து வந்தனர். இதன் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றுடன்  நிறைவடைந்தது. இந்த நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் முக்கிய கட்சியினரான திமுக கட்சி சார்பில் தங்க தமிழ்செல்வனும், பாஜக கூட்டணி கட்சி சார்பாக அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனும் ஒன்றன் பின் ஒன்றாக தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதற்கிடையில் யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி என்பவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற தான் தேனி தொகுதியில் போட்டியிடுவதாக கூறிக்கொண்டு தனது வேட்பு மனுவை தேனி மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்.


MI vs SRH LIVE Score: மும்பை இந்தியன்ஸ் வீரர்களை ஓடவிடும் டிராவிஸ் ஹெட்; தலையை பிய்த்துக் கொள்ளும் பாண்ட்யா!




Phone Tapping Row: உங்க ஃபோன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? ஒட்டுக் கேட்கப்படுகிறதா என உறுதி செய்வது எப்படி?


தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டி :


வேட்புமனு தாக்கலுக்கு பின்பு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவிற்கு விருப்பமான தொகுதி என்பதால் இங்கு  போட்டியிடுகிறேன் என்றும், தான் எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி பதிவு செய்துள்ளதாகவும், இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் சுயேட்சையாக போட்டியிடுவதாக தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் கொண்டு வருவேன் என தெரிவித்ததுடன், ஜெயலலிதா இருந்த இடத்தில் இருந்துதான் தேனி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்யவுள்ளதாக தெரிவித்தார். தனக்கு எதிராக யாரும் போட்டியில்லை எனவும் தெரிவித்தார்.