சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் 4 மையங்களில் நாளை எண்ணப்பட உள்ளன. அதற்கான முன்னேற்பாடு பணிகள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று மாலைக்குள் அத்தியாவசிய தேவைகள் உள்பட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்கள் கூடுதல் பாதுகாப்போடு தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணைய உத்தரவுப் படி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் மற்றும் ஊடகத் துறையினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்த ஏற்கனவே அலுவலர்கள் பணியாளர்கள் முகவர்கள் கூடுதலாக 20 சதவிகிதம் பேர் ரிசர்வ்ல் உள்ளனர்.
கொரோனா தொற்று எவருக்கேனும் உறுதி செய்யப்பட்டால் ரிசர்வ் இல் உள்ள 60 விழுக்காட்டிலிருந்து மாற்று நபர் அனுப்பி வைக்கப்படுவர். சேலம் மாவட்ட அளவில் மொத்தம் 79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
குறைந்தபட்சம் 25 சுற்றுகள் முதல் 31 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட உள்ளன