18வது மக்களவைத் தேர்தலுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழ்நாடு தேர்தல் களம் வழக்கத்தை விடவும் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தன் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியவற்றை விரிவாகக் காணலாம். 



  1. சூரியனுக்கு போடும் ஓட்டு! தனக்குத் தானே வைக்கும் வேட்டு! தாமரைக்கு தரும் வாக்கு! தமிழ்நாடு பெறும் தனி செல்வாக்கு! - டாக்டர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பு


பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில்,  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, தற்போது நடக்கவிருப்பது இந்திய நாட்டின் பிரதமருக்கான தேர்தல்! பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிற பிரதமர் மோடியை மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல்!அதனால் நம்மை தமிழகத்தில் வாட்டி வதைக்கும் சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள்!  கல்வி தெய்வமாம் சரஸ்வதி வீற்றிருக்கும் தாமரை சின்னத்தில் வாக்களித்து தம்மை  வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து கிருஷ்ணாபுரம் பகுதியில், பரப்புரை செய்த அவர்,  கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா காலம் தவிர்த்து மீதமிருந்த 3 ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியாக அளிக்கப்பட்ட 17 கோடி ரூபாயை வகுப்பறைகள், சமூகக் கூடங்கள், நியாய விலைக் கடைகள், நீர்த் தேக்க தொட்டிகள், கணினி வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை கட்டிக் கொடுத்து ஒரு பைசா மீதம் வைக்காமல் மக்களுக்காக செலவிட்டிருப்பதாக தெரிவித்தார்.




மேலும் தனது சொந்த நிதியாக 118 கோடி ரூபாய் இலவச உயர்கல்வி திட்டத்திற்காக செலவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஏழை மாணவ, மாணவிகள் பயனடைந்ததாகவும் கூறினார். தனது சாதனைகளை வேறு எந்த ஒரு அரசியல் தலைவரும், வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும்  வெளியிடாத வகையில், தான் புத்தகமாக வெளியிட்டு பொதுமக்களுக்கு கொடுத்து வருவதாக கூறினார். மேலும்


பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள உள்ளுர் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


இதனைத் தொடர்ந்து கை.களத்தூரில் பரப்புரை மேற்கொண்ட பாரிவேந்தர்,  நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த தரமான எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும்,  தம்மை எம்.பியாக தேர்ந்தெடுத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 1500 குடும்பங்களுக்கு கட்டணமில்லா உயர்தர இலவச மருத்துவம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.


மேலும், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரிக்கவும்,  கை.களத்தூர் பஞ்சாயத்தை பேரூராட்சியாக மாற்றவும்,  தீயணைப்பு நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம் ஆகியவற்றை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.



  1. பிரதமர் மோடி எங்கள் "boss"! மூன்றாவது முறையாக மக்களவைத் தேர்தலிலும் " Pass"! - இளைய வேந்தர் ரவி பச்சமுத்து திட்டவட்டம்!


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி  வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக முசிறி பகுதியில்  பிரச்சாரம் மேற்கொண்ட டாக்டர் ரவி பச்சமுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் பெருமை மிக்க பிரதமராக வீற்றிருக்கும் மோடி மூன்றாவது முறையாகவும் தேர்தலில் வென்று சாதனை படைப்பார் என திரண்டிருந்த வாக்காளர்களிடையே நம்பிக்கை தெரிவித்தார்.


இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டதையடுத்துமாங்கரைப் பேட்டையில் குழுமியிருந்த பெண்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


பின்னர் திருச்சி மாவட்டம் முசிறியின் பல்வேறு இடங்களில் இளையவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாரிவேந்தர் மீண்டும் எம்பியானால் அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரயில் பாதை, மகளிர் அரசு கல்லூரி,  1500 குடும்பங்களுக்கு உயர்தர இலவச சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்வார் என உறுதியளித்தார்.




 பாரிவேந்தர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் எம்பி தேர்தலில் போட்டியிடவில்லை. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் போட்டியிடுவதாக தெரிவித்த இளையவேந்தர், டாக்டர்.பாரிவேந்தரருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எம்.பி.யாக வெற்றி பெற செய்ய வேண்டும என கேட்டுக்கொண்டார்.


இதனிடையே, முசிறி துறையூர் சாலையில் உள்ள  பேக்கரியில் தேநீர் அருந்திய இளையவேந்தர்,  பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியபோது, முசிறியில் மகளிர் கலைக் கல்லூரி, காவிரி ஆற்றில் தடுப்பணை, மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தரவேண்டும் என  மக்களும், விவசாயிகளும் டாக்டர் ரவி பச்சமுத்துவிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், மூன்று கோரிக்கைகளையும் பாரிவேந்தர் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் உங்களுக்காக பணியாற்ற தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்.



  1. தமிழகத்தில் குடும்ப ஆட்சி! கொடும்பாவி ஆட்சி! பிரதமர் மோடி ஆட்சி! பார் போற்றும் செங்கோலாட்சி - பாரிவேந்தர் வாக்கு வேட்டை!


 கதிரவன் உதிக்கும் முன் விழித்து தொகுதி நலனே தன் நலன் எனக் கொண்டு இடையறாது பணியாற்றி வரும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் தாளக்குடி பாலமுருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு   தாளக்குடி பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார. அப்போது கூடியிருந்த வாக்காளர்களிடம் உரையாற்றிய பாரிவேந்தர், எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என குடும்ப திமுகவினர் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பத்தாண்டுகள் சீரும் சிறப்புமாக ஊழலற்ற ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்ள எவர் மீதும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்ட முடியாதபடி நேர்மையான ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.


மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மக்களது தேவைகளை நிறைவேற்றி சேவையாற்றி வருவதாக குறிப்பிட்ட பாரிவேந்தர், தான் பெரம்பலூர்  நாடாளுமன்ற உறுப்பினரானால் காமராஜர் காலத்திலிருந்து கிடப்பில் போடப்பட்டுள்ள கனவு திட்டமான அரியலூர் பெரம்பலூர் ரயில்வே திட்டம் உறுதியாக கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்தார்.




தொடர்ந்து பேசிய பாரிவேந்தர்,மோடியின் கரத்தை வலுப்படுத்தவது,  ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் தான் எம்.பியானால் தாளக்குடிக்கு சமுதாய கூடமும்,  அப்பாத்துறை கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.


பின்னர் திருமண மேடு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட  பாரிவேந்தரை வரவேற்க தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன பணிகள் செய்தேன் என்பதனை ஒரு School student Progress Report card போல  மக்களுக்கு  வழங்கியுள்ளதாக கூறினார்.


கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு பெரம்பலூர் தொகுதி வளர்ச்சி நிதியாக  வழங்கிய ₹ 17 கோடியை  பரவலாக  மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக வகுப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டிகள் போன்றவற்றை கட்டித் தந்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திருமண மேடு நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,   கூகூர் கிராமத்தில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலை சொந்த செலவில் வெண்கல சிலையாக மாற்றி கொடுக்கப்படும் எனவும்  உறுதியளித்தார். மேலும் மத்தியில் பிரதமர் மோடிக்கு எதிராக கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை எனவும், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றினால் தான் ஜனநாயகம் தழைக்கும் எனவும் குறிப்பிட்டார்.



  1. எட்டாத உயர் மருத்துவ சிகிக்சையை எளிமையாக்கிய பாரிவேந்தர். திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெற எல்லாரிடமும் போதிய பண வசதி இருக்கிறதா?


எதிர்பாராத, அவசர கால மருத்துவச் செலவை எல்லாராலும் ஏற்க முடியுமா? எந்த விதமான சிகிச்சை என்றாலும் அனைவராலும் அதற்கான செலவு செய்ய முடியுமா என்றால் முடியாது என்பதே விடையாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அவசர மருத்துவ செலவு வரும் போது நம்முடைய சேமிப்பு மொத்தமாக அதற்கே சென்று விடுகிறது. கையில் பணம் இல்லாதபோது கடன் வாங்கி மருத்துவ செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதிலும் மருத்துவமனையில் திடீரென அதிக பணம் கட்ட சொன்னால், கடன் வாங்கி செலவு செய்வது கூட அந்த நேரத்தில் முடியாமல் போகும் சூழல் சிலருக்கு உண்டாகிறது.




நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு திடீரென உடல்நிலை மோசமாகிறது. அவரை பரிசோதித்தில் கர்ப்பையில் புற்றுநோய் என்பதை கண்டுபிடிக்கிறார்கள். மாத சம்பளத்தில் காலத்தை ஓட்டும் அவர்களுக்கு இது போன்ற மருத்துவச் செலவு என்பது அதிர்ச்சிகரமாக விஷயமாகும். வேறு வழியில்லாமல் மருத்துவம் பார்க்க நகைகளை அடகு வைத்து, சொத்துகளை விற்று லட்ச கணக்கில் மருத்துவமனைக்கு பணம் கட்டி வைத்தியம் பார்ப்பார்கள்.  தான் நடத்தும் மருத்துவமனைகளில் இது போன்ற உண்மைக்கதை நேரில் பார்க்கும் பாரிவேந்தர், முடிந்தவரை பல கஷ்டப்படும் மக்களுக்கு  சலுகைகளை அளித்து வருகிறார். இது போன்ற நிலை தன்னுடைய பெரம்பலூர் தொகுதி மக்கள் என்ன செய்வார்கள் என யோசித்த பாரிவேந்தர் , பெரம்பலூர் மக்களவை தொதிக்குட்ட குளித்தலை, மண்ணச்சநல்லூர், துறையூர், லால்குடி, முசிறி, பெரம்பலூர் என 6 சட்டமன்ற தொகுதியிலுள்ள ஒரு 1500 ஏழை குடும்பங்களுக்கு தலா 10 லட்சம்  வீதம மருத்துவ சிகிச்சை பார்ப்பதற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். ஏழை குடும்பங்களுக்கு எட்டாத உயர் மருத்துவ சிகிக்சையை தன்னுடைய தாராள மனதால் எளிமையாக மாற்றியுள்ளார் டாக்டர் பாரிவேந்தர்.


யார் இந்த பாரிவேந்தர்?


சாதாரண ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று தமிழகத்தின் கல்வித் தந்தைகளில் ஒருவராக தன்னை உயர்த்திக் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்திய ஜனநாயக கட்சியை நிறுவினார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் பாரிவேந்தர் மக்களின்  பெரும் ஆதரவை பெற்று,  பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தொடர்ந்து நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காகவும், உயரிய கொள்கைகள் கொண்டு மாணவ மாணவிகளுக்கு உலகத் தரக் கல்வியை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, வியக்க தக்க செயல்களை செய்து வருகிறார்.  


சொந்த பணத்தை தொகுதி மக்களுக்கு செலவிடுபவர்


டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. தனது சொந்த நிறுவனங்களின் மூலம், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டார். அதில் முக்கியமான திட்டங்களாக திகழ்பவை, இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவர் ரூ.118 கோடியே 77 லட்சத்து 51 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் பல்வேறு படிப்புகளில் 1,200 மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்துள்ளார். இதனிடையே, கொரோனா பேரிடர் கால உதவிகளை ரூ.2 கோடியே 22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் செய்துள்ளார். இதில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் வினியோகம், வெளியூர்களில் சிக்கியோர் மீட்பு போன்ற பணிகள் அடங்கும். மேலும், பள்ளி மற்றும் ஊர் நலனுக்காக ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பில் கணினி, போர்வெல் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு பணிகளை நிறைவேற்றி உள்ளார். ஆன்மிகம் மற்றும் அறப்பணிகளுக்காக ரூ.4 கோடியே 80 லட்சத்து 80 ஆயிரம் செலவு செய்துள்ளார். மொத்தம் ரூ.126 கோடியே 90 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டில் ஏராளமான திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார். பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக டாக்டர் பாரிவேந்தர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் செய்த மக்கள் பணிகளை பாராட்டி இந்த முறையும் மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் மீண்டும் பெரம்பலூர் தொகுதி எம்பி ஆவார் என்ற நம்பிக்கையில்  மக்கள் உள்ளனர்.