ஐந்து நாட்களில் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் வசூலித்துள்ளது.


ஆடு ஜீவிதம்


பிருத்விராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியான படம் ஆடு ஜீவிதம். தமிழ் , இந்தி, கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பிளெஸி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆடு ஜீவிதம் என்கிற மலையாள நாவலை தழுவி எடுக்கப் பட்டுள்ள இந்தப்படம் வேலைத் தேடிச் சென்று செளதியின் பாலைவனத்தில் அடிமையாக மாட்டிக்கொண்டு தப்பித்து வந்த கதையை சொல்கிறது. 


இந்தப் படத்தில் நடிகர் பிருத்விராஜின் நடிப்பு அனைவரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இந்தப் படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் 98 கிலோவில் இருந்து 68 கிலோ வரை எடை குறைத்துள்ளார். மேலும் படத்தில் வரும் ஒரு காட்சிக்காக நடிகர் பிருத்விராஜ் மூன்று நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தார் . மூன்றாவது நாள் தனது உடலில் இருக்கும் நீரை வற்றச் செய்ய 30 மில்லி வோட்கா குடித்து நடிக்க வந்தார் . அவரை சக்கர  நாற்காலியில் உட்காரவைத்து கூட்டி வந்து அந்த காட்சியில் நடிக்க வைத்தனர் என்று தகவல் வெளியானது. ஒரு படத்திற்காக பிருத்விராஜ் எடுத்துக் கொண்டுள்ள சிரத்தை ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளது.


ஆடு ஜீவிதம் பாக்ஸ் ஆஃபிஸ்


ஆடு ஜீவிதம் படம் முதல் நாளில் உலகளவில் 16 கோடிகள் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் இரண்டு மடங்காக அதிகரித்தது. படம் வெளியான 3 நாட்களில் 50 கோடியை வசூல் இலக்கை தொட்டது . இதனைத் தொடர்ந்து தற்போது ஆடு ஜீவிதம் படத்தின் அடுத்த பாக்ஸ் ஆஃபிஸ் அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு. இதன்படி ஆடு ஜீவிதம் படம் மொத்தம் 5 நாட்களில் உலகளவில் 75 கோடி வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் படம் 100 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.






அடுத்தடுத்து 100 கோடிகளை அள்ளிய மலையாள படங்கள்


10 வருடங்களுக்கு முன் இந்திய சினிமாத் துறைகளில் வசூல் ரீதியாக பின் தங்கிய ஒன்றாக இருந்தது மலையாள சினிமா. இந்தாண்டு மலையாளத்தில் வெளியாகிய பிரேமலு , மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூல் குவித்தன. அதிலும் மஞ்சுமெல் பாய்ஸ் படம் 200 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தற்போது மலையாளத்தில் வெளியாகி இருக்கும் ஆடு ஜீவிதம் படம் அடுத்த 100 கோடி கிளப்பில் சேர இருக்கிறது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது