விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் கடந்த 5 ஆம் தேதி வெளியான வாக்காளர் பட்டியல் படி மொத்தம் 23,939 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11,497 ஆண்கள், 12,422 பெண்கள், 20 திருநங்கைகள். செஞ்சி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். வாக்காளர்கள் அதிகம் என்பதால் 18 வார்டுகளுக்கு 32 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


Urban Local Body Election | வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பரப்புரையை தொடங்கிய அமைச்சரின் மகன்



செஞ்சி பேரூராட்சியை பொறுத்தவரை கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த 5 தேர்தலிலும் தி.மு.க., சார்பில் தற்போது அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 தேர்தலின் போது 9 வார்டுகளில் தி.மு.க‌வும், 7 வார்டுகளில் அ.தி.மு.கவும், 2 வார்டுகளில் தே.மு.தி.க.,வும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் தற்போது திமுக சார்பில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 17 ஆம் தேதி செஞ்சி பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டு நேர்காணல் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மனைவி சைதானி பி மற்றும் அவரது மகன்  மொக்தியார்  ஆகியோர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.



Local Body Election | குடும்ப அரசியலா! குடும்பத்தோடு அரசியலா! - அமைச்சர் செஞ்சி மஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


இதனைத் தொடர்ந்து செஞ்சி பேரூராட்சி 6ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மனைவி சைதானிபீ மஸ்தானும், 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அவரது மகன் மொக்தியார் மஸ்தானும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், திமுகவினர் மற்றும் மற்ற அரசியல் கட்சியினர் அமைச்சர் மஸ்தான், தன் குடுமபத்துடன் அரசியலில் ஈடுபட்டு வருவதை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்த நிலையில் அமைச்சர் மஸ்தான் மனைவி சைதானிபீ மஸ்தான் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்.