Erode East By Election 2023: கமலாலய வாசலில் காத்திருந்ததிற்கான காரணத்தினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 


ஈரோடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையைச் சந்திக்க தமிழ்நாடு பா.ஜ.க. தலைமை அலுவகலத்துக்கு அ.தி.மு.க. பழனிச்சாமி தரப்பு அணி சென்றது. அப்போது பா.ஜ.க. அலுவலகத்துக்குச் சென்ற பழனிச்சாமி தரப்பினர் அலுவலகத்துக்குள் செல்லாமல் அலுவலக வாசலில் காத்திருந்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் காத்திருந்தது சமூக வலைதளத்தில் வைரலானது. 


இதுகுறித்து இன்று நிருபர்களைச் சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது,"நாங்கள் முன்னால் வந்துவிட்டோம். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் வந்த கார் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்னல் காரணமாக பா.ஜ.க. அலுவலகம் வர கால தாமதம் ஆகிவிட்டது. அவர்களுக்காகத் தான் காத்திருந்தோம். மற்றபடி இதில் எந்த அரசியலும் இல்லை" என கூறியுள்ளார். 


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
 இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ,பெஞ்சமின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்களை சென்னை தியாகராய நகரில் உள்ள இல்ல த்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர் .


இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையை சேர்ந்த வேட்பாளர் போட்டியிட்டால் அது சுயேட்சை வேட்பாளராக தான் இருக்க முடியும் என்றும் ஓபிஸ் தலைமையிலான அதிமுக அணி இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசியவர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை சென்னை உயர்நீதிமன்றம்   அங்கீகரித்துள்ளதாகவும் மேலும் ஏ படிவம் பி படிவத்தில் கையை திடுவதற்கான உரிமை எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளதாகவும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருவதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.


முன்னதாக பேசிய இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணி தான் தங்களுடைய கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும்  இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து இந்த சந்திப்பில் விவாதித்துதாகவும் அவர் தெரிவித்தார்