ஒட்டுமொத்த இந்தியாவும் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் மக்களவைப் பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் தொடங்கி, மாநிலக் கட்சிகள் மட்டும் இல்லாமல், நாடு முழுவதும் உள்ள லெட்டர் பேட் கட்சிகள் வரை மும்முரமாக தங்களது கட்சி நிர்வாகிகளை தயார் செய்து வருகின்றனர். 


தேர்தல் சின்னம்:


மக்களவைத் தேர்தல் பிரதமரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் என்றாலும், இந்த தேர்தலில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். கட்சி சார்ந்து களமிறங்கும் வேட்பாளர்கள் அந்தந்த கட்சிக்கென இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள சின்னங்களில் போட்டியிடுவார்கள். அதேநேரத்தில் லட்சக்கணக்கான சுயேட்சை வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தான் ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள சின்னங்களில் ஏதேனும் ஒரு சின்னத்தை வேட்பாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். 


இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை 197 சின்னங்களை அங்கீகரித்து அட்டவணைப் படுத்தியுள்ளது.  இந்த அட்டவணை கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அட்டவணைப்படுத்தப்பட்ட பல சின்னங்களை நாம் பொதுத் தேர்தல் தொடங்கி, உள்ளாட்சி தேர்தல் வரை என ஏதேனும் ஒரு தேர்தலில் சந்தித்திருக்கலாம். அப்படியான சின்னங்களில் மிகவும் வித்தியாசமான மற்றும் இதெல்லாம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களா என நம்மை சற்று யோசிக்க வைக்கும் அளவிற்கு பல சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. அப்படியான சின்னங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


கிரிக்கெட் பேட்ஸ்மேன்:


கிரிக்கெட் பேட்ஸ்மேன் சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில் வரிசை எண் 10இல் இடம் பெற்றுள்ளது. 


சைக்கிள் பம்ப்:


வரிசை 15இல் இடம் பெற்றுள்ள சைக்கிள் சக்கரத்திற்கு காற்றடிக்கும் பம்ப் இடம் பெற்றுள்ளது. 


பிரட்:


துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட பிரட் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றாக உள்ளது. இது வரிசை எண் 21இல் உள்ளது. 


குடை மிளகாய்:


தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள இலவச சின்னங்களில் குடை மிளகாயும் இடம் பெற்றுள்ளது. இது வரிசை எண் 31இல் இடம் பெற்றுள்ளது. 


கோட்:


இந்திய தேர்தல் ஆணையம் நமது உடைகளில் சிலவற்றை சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. அதில் கோட் இடம் பெற்றுள்ளது. இது வரிசை எண் 43இல் இடம் பெற்றுள்ளது. 


மவுஸ்:


அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில் 47வது வரிசை எண்ணில் மவுஸ் இடம் பெற்றுள்ளது. அதாவது கணிப்பொறி சுட்டி. கணினியை செயல்படுத்த பயன்படுத்தப்படும் சாதனமான மவுஸ் இடம் பெற்றுள்ளது. 


காதணி (தொங்கட்டான்):


பெண்கள் அணியும் காதணியான தொங்கட்டான், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள சின்னங்களில் ஒன்றாக உள்ளது. இது வரிசை எண் 61இல் இடம் பெற்றுள்ளது. 


குழந்தைக்கு அணிவிக்கும் ஃபிராக்:


தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள சின்னங்களில் குழந்தைக்கு அணிவிக்கும் ஃபிராக்கும் இடம் பெற்றுள்ளது. 


ஐஸ் க்ரீம்:


தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள சின்னங்களில் ஐஸ் க்ரீமும் இடம் பெற்றுள்ளது. இது வரிசை எண் 89இல் இடம் பெற்றுள்ளது. 


லேடி பர்ஸ்:


மகளிர் பயன்படுத்தும் பர்ஸ் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரித்துள்ள சின்னங்களில் ஒன்றாக உள்ளது. இது வரிசை எண் 96இல் இடம் பெற்றுள்ளது. 


லூடோ:


லூடோ என அழைக்கப்படும் விளையாட்டின் வரைபடம் தேர்தல் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


பேண்ட்:


நாம் அணியும் பேண்ட் தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்டுள்ள சின்னமாக உள்ளது. 


நிலக்கடலை:


தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில் நிலக்கடலையும் இடம் பெற்றுள்ளது. 


போன் சார்ஜர்:


நாம் நமது மொபைல்களுக்கு சார்ஜ் ஏற்ற பயன்படுத்தும் போன் சார்ஜர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றாக உள்ளது. 


சாக்ஸ்:


 நாம் காலுக்கு அணியும் சாக்ஸ் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


மேற்குறிப்பிட்டுள்ள சின்னங்களைப் போல் பல சின்னங்கள் இடம் பெற்றுள்ளது.