திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போது கஜானா காலியாக இருந்தது அதிமுக ஆட்சியின் போது ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன். ஸ்டாலின் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என திமுக இளைஞரணி மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நாகர்கோவிலில் தேர்தல் பரப்புரையில் பேசினார்.
இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்தார் அப்போது அவர் " அதிமுக ஆட்சியை விட்டு செல்லும் போது தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து கஜானாவை காலியாகிசென்றனர். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதிமுக ஆட்சியின்போது ஒரு கோடி பேருக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 9 மாத ஆட்சி காலத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வார்டுக்கு சென்ற முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதேபோன்று இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராகவும் முகஸ்டாலின் உள்ளார் என வடநாட்டு பத்திரிகைகள் கூறுகின்றன. நான் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து காணாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதோடு என்னை தேடி வருகிறார். எனது வீட்டில் கூட அப்படி என்னை தேடவில்லை. நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறேன். கடந்த நீட் தேர்வு மசோதா நிறைவேற்றும்போது சட்டமன்றத்தில் எனது எதிரே எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார் ஆனால் அவர் மேஜைக்கு கீழே பார்த்துக் கொண்டிருந்ததால் மேலே இருப்பவர் தெரியவில்லை. ராகுல் காந்தி, மோடியை பார்த்து சவால் விட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்கும் வரை பாரதீய ஜனதா கட்சி யால் கால் ஊன்ற முடியாது என்று. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 52 வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
விசைப்படகு பழுதடைந்ததால் மகாராஷ்டிரா துறைமுகத்தில் தவிக்கும் தமிழக,அசாம் மீனவர்களை மீட்க வீடியோ மூலம் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னதுறை நாபி என்ற விசைப்படகு உரிமையாளர் ஜெகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வினு , பெனிட்டோ, அசாம் மாநிலத்தை சேர்ந்த லுக்கூ, கொகன்,குமரி பூந்துறை மீனவகிராமத்தை சேர்ந்த மைகிள்டான், மனீஷ்,சுரேஷ்,ததேயூஸ், ஜோபாய் ஆகிய பத்து பேர் கடந்த மாதம் 29 தேதி கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர் கடந்த எட்டாம் தேதி நடுக்கடலில் வைத்து விசைபடகின் ஸ்டீயரிங் சாப்ட் உடைந்து உள்ளது அந்த நேரத்தில் கடலோரகாவல்படை உதவியை நாடவே அவர்கள் வந்து பழுதை சீர்செய்து கொடுத்துள்ளனர் மீண்டும் இரண்டு நாட்களில் படகில் அதே பழுது ஏற்பட்டுள்ளது .
அங்கு வந்த கடலோரகாவல்படை நீங்கள் அருகே உள்ள துறை முகத்தில் கரையேறுங்கள் அங்கு பழுதை சீர் செய்யுங்கள் என கூறி விட்டு சென்று உள்ளனர் ஆகவே அருகே உள்ள மகாராஷ்டிர மாநில ரத்தினகிரி துறைமுகத்தில் கரை ஒதுங்கி உள்ளனர் அங்கு வந்த அம்மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்கள் பிடித்து வந்த மீன்களை விற்று அவர்கள் பணத்தை எடுப்பதாக கூறி பத்து மீனவர்கள் மற்றும் படகை பிடித்து வைத்திருப்பதாக அந்த மீனவர்கள் உறவினர்களுக்கு அனுப்பிய வீடியோ மற்றும் ஆடியோ வைரலாகி வருகிறது இதனிடையே குமரி மாவட்ட மீனவர்கள் அவர்களை உடனே விடுவிக்க தமிழக அரசு நடவடிகை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.