தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்கிற நிலையில் தற்போதைய நிலவரப்படி வாக்கு எண்ணிக்கையில் திமுக 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக  திமுக கூட்டணி 149 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றபடி அதிமுக கூட்டணி 84 இடங்களில் முன்னிலை.இரட்டை இலைச் சின்னத்தில் மட்டும் 73 இடங்களில் அந்தக்கட்சி முன்னிலை வகிக்கிறது.


தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று  காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக அமோக வெற்றி பெரும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் கடும்போட்டி கொண்டாக மாறியுள்ளது. முன்னிலை பின்னடைவு நிலை கணிக்க முடியாததாக ஆகிவருகிறது.