2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. "வெற்றி மட்டுமே இலக்கு" என்ற அடிப்படையில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில முக்கிய முகங்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

போஸ் வெங்கட்: 

 திமுகவின் தீவிர விசுவாசியாகவும், நடிகராகவும் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும் அறியப்படுபவர் நடிகர் போஸ் வெங்கட். கடந்த 2021 தேர்தலிலேயே அறந்தாங்கி தொகுதியைக் குறிவைத்த இவருக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை, இதனால் இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பெரிதும் நம்பினர். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் அறந்தாங்கி கூட்டணிக்குச் சென்றதாலும், மற்ற இடங்களிலும் சீனியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாலும் இவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. 

 திவ்யா சத்யராஜ்: 

நடிகர் சத்யராஜின் மகளும் சமூக ஆர்வலராகவும், ஊட்டச்சத்து நிபுணராகவும் இயங்கி வந்த திவ்யா சத்யராஜ், சமீபத்தில் திமுகவில் இணைந்தபோது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் குறிப்பாக திமுகவின் திட்டங்களை மக்கள் மத்தியில் தனது சமூக வ. பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளைக் கவர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Continues below advertisement

ராஜீவ் காந்தி: 

திமுகவின் செய்தித் தொடர்பாளராக, ஊடக விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆசராமல் பதிலளிப்பவர் ராஜீவ் காந்தி. இளைஞர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இவருக்குத் தனி செல்வாக்கு  இருந்து வந்தது. இதனால் இவர் பெரம்பலூர் அல்லது டெல்டா மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு சீட் கிடைக்காதது அவரது சமூக வலைதள ஆதரவாளர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. "களப்பணியை விடக் கட்சியின் குரலாக ஒலிப்பதே இப்போதைக்கு முக்கியம்" என்ற தலைமையின் கணக்கே இதற்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பத்மப்ரியா & வைஷ்ணவி

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து திமுகவிற்குத் தாவிய பத்மப்ரியா மற்றும்  தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதில் பத்மப்ரியா கடந்த மதுரவாயல் தொகுதியில் கடந்த முறை கணிசமான வாக்குகளைப் பெற்றவர் என்பதால் வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால் திமுக இந்த முறை அத்தொகுதியின் எம்.எல்.ஏவும் மற்றும் அனுபவ வாய்ந்த அரசியல்வாதியான காரம்பாக்கம் கணபதிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

சமூக செயல்பாடுகளுக்காக அறியப்பட்ட வைஷ்ணவி கட்சியின் சுற்றுச்சூழல் அணியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தவெகவில் இருந்து விலகிய பின்னர், விஜயின் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பதே இவரின் வாடிக்கையாக இருந்து வந்தது, ஒரு கட்டத்துக்கு மேல் இவரின் விமர்சனங்கள் எதிர்வினையாக மாறியது இவருக்கு சீட் கிடைப்பதற்கு தடையாக மாறியது

ஓ.பி. ரவீந்திரநாத்: 

அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம்  தரப்பு திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்த நிலையில், அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் திமுக சின்னத்திலோ அல்லது ஆதரவிலோ போட்டியிடுவார் என தகவல்கள்  பரவின. ஆனால், திமுகவின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் இவருக்கு இடமில்லை. ஆனால் அவரது தந்தையான ஓபிஎஸ்-க்கு திமுக போடி தொகுதியை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அனுபவத்தை நம்பும் திமுக

ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என இந்த முறை திமுகவின் வேட்பாளர் தேர்வில் 'ரிஸ்க்' எடுக்கத் தலைமை விரும்பவில்லை என்பது தெரிகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் இளைஞர்களைக் கவரும் வகையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், திமுக தனது 'பழைய மற்றும் அனுபவம் வாய்ந்த' வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.