தி.மு.க. தலைவரும், முதலமைச்சரும் ஸ்டாலின் தலைமையில் மக்களவைக்கான தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நிறைவு பெற்றது. 


மக்களவைத் தேர்தல்:


2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடே உற்றுநோக்கும் இந்த தேர்தலில் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.  


இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க. கூட்டணியானது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு, கூட்டணி கட்சிகளிடையே உடன்பாட்டை எட்டியுள்ளது.


தி.மு.க. கூட்டணி:


திமுக கூட்டணியில், திமுக நேரடியாக 21 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 10, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள், மதிமுக, கொ.ம.தே.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு இடங்கள் என 40 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டன. 




இந்நிலையில் திமுக மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விண்ணப்பங்களை விநியோகம் செய்தது. இதனை ஏராளமானோர் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். கிட்டதட்ட 10 நாட்களாக இந்த விண்ணப்பம் வழங்கும் மற்றும் பெறும் பணி நடந்து வந்த நிலையில், இன்று விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.


நேர்காணல்:


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக விருப்ப மனு அளித்தவர்களை சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.




இன்றுடன், திமுக வேட்பாளரை தேர்வு செய்யப்படும் பணியானது, இன்றுடன் இறுதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.  தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட, எம்.பி கனிமொழி தவிர யாரும் போட்டியிட வேட்புமனு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆகையால், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி எம்.பி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது என கூறப்படுகிறது. 


Also Read: Congress Candidates List: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ஸ்டார் வேட்பாளர்கள் யார்? யார்?