2021 சட்டமன்றத் தேர்தலுக்கான முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே வெல்லும் என்று தெரிவிக்கின்றன. ஆனால், மக்கள் கொடுக்கும் உண்மையான தீர்ப்பு இன்று தெரிந்துவிடும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மே 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத தேர்தலை தமிழ்நாடும், தமிழக மக்களும் சந்திக்கிறார்கள். இதனால், இந்த தேர்தல் முடிவுகளை தமிழ்நாடும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடுமே எதிர்நோக்கித்தான் காத்திருக்கிறது.


தேர்தல் முடிவுகளை அறிவதற்கு முன்பாக, கருத்துக்கணிப்பில் எந்தக கட்சி வெல்லும் என்பதையும் தெரிந்துக்கொள்ளவும் மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முந்தையை மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. இதில், பெரும்பாலும் திமுக கூட்டணியே வெல்லும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. இது அக்கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது ABP நாடு மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. 


கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளோடு 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒப்பிடும்போது அதிமுகவின் ஓட்டுக்கள் மண்டல வாரியாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அதன் முழுவிவரம் இதோ:


டெல்டா மண்டலம்


அரவக்குறிச்சி
கரூர்
கிருஷ்ணராயபுரம்
குளித்தலை
மணப்பாறை
ஸ்ரீரங்கம்
திருச்சிராப்பள்ளி (மேற்கு)
திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
திருவெறும்பூர்
லால்குடி
மண்ணச்சநல்லூர்
முசிறி
துறையூர்
பெரம்பலூர்
குன்னம்
அரியலூர்
ஜெயங்கொண்டம்



சீர்காழி
மயிலாடுதுறை
பூம்புகார்
நாகப்பட்டினம்
கீழ்வேளூர்
வேதாரண்யம்
திருத்துறைப்பூண்டி
மன்னார்குடி
திருவாரூர்
நன்னிலம்
திருவிடைமருதூர்
கும்பகோணம்
பாபநாசம்
திருவையாறு
தஞ்சாவூர்
ஒரத்தநாடு
பட்டுக்கோட்டை
பேராவூரணி
கந்தர்வகோட்டை
விராலிமலை
புதுக்கோட்டை
திருமயம்
ஆலங்குடி
அறந்தாங்கி



திருச்சியை மையமாக கொண்ட டெல்டா மண்டலத்தில் கடந்த முறை 23 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக, இம்முறை 7 முதல் 9 தொகுதிகளில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் டெல்டா மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற அதிமுக, 15 இடங்கள் வரை வெற்றிவாய்ப்பை இழப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற திமுக, 32 முதல் 34 இடங்களில் வெற்றி பெறப்போவதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. டெல்டாவில் இம்முறை டிடிவி தினகரனின் அமமுக 1 இடத்தில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. மற்ற எந்த கட்சியும் டெல்டா மண்டலத்தில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்கிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு. கடந்த முறை 44.7 சதவீதம் வாக்குகள் பெற்ற அதிமுக, இம்முறை 33.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெறுவதாகவும், கடந்த முறை 39.7 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக 51.8 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. அமமுக 4.3 சதவீதம் வாக்குகளை இங்கு பெறுகிறது. நாம் தமிழர், மநீம உள்ளிட்ட மற்றவர்கள் அனைவர் இணைந்து 10.8 சதவீதம் வாக்குகள் பெறுகின்றனர்.   


சென்னை மண்டலம்


ஆர்.கே.நகர்
பெரம்பூர்
கொளத்தூர்
வில்லிவாக்கம்
திரு-வி-க-நகர்
எழும்பூர்
இராயபுரம்
துறைமுகம்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி
ஆயிரம் விளக்கு
அண்ணா நகர்
விருகம்பாக்கம்
சைதாப்பேட்டை
தி.நகர்
மயிலாப்பூர்
வேளச்சேரி


தலைநகர் சென்னையை மையமாக கொண்ட சென்னை மண்டலத்தில், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் வெற்றிபெற்ற அதிமுக, இம்முறை 3 முதல் 5 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எப்போதும் தனக்கு பலமாக இருந்த சென்னை மண்டலத்தை கடந்த தேர்தலில் கோட்டைவிட்ட திமுக, இம்முறை சென்னை மண்டலத்தில் 11 முதல் 13 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. கடந்த 2016 தேர்தலில் பெற்ற தொகுதிகளுடன் ஒப்பிடும்போது, அதிமுக 2 தொகுதிகளை இழக்கிறது; திமுக 2 தொகுதிகளை கூடுதலாக பெறுகிறது.  இந்த மண்டலத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் மட்டுமே வெற்றி பெறுகிறது. வேறு கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்கிறது கருத்துக்கணிப்பு. 45.6 சதவீதம் வாக்குகளை 2016ல் பெற்ற அதிமுக இம்முறை 34.7 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெறுவதாகவும், 41.8 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக, இம்முறை 40.6 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெறுகிறது. அமமுக 3.8 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. அதே நேரத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 20.9 சதவீதம் வாக்குகளை பெறுகின்றனர். இது திமுகவின் கடந்தகால வாக்கு சதவீதத்தை பாதிக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கிறது. 


கொங்கு மண்டலம்


ஊத்தங்கரை
பர்கூர்
கிருஷ்ணகிரி
வேப்பனஹள்ளி
ஓசூர்
தளி
பாலக்கோடு


கெங்கவல்லி
ஆத்தூர்
ஏற்காடு
ஓமலூர்
மேட்டூர்
எடப்பாடி
சங்ககிரி
சேலம் (மேற்கு)
சேலம் (வடக்கு)
சேலம் (தெற்கு)
வீரபாண்டி
இராசிபுரம்
சேந்தமங்கலம்
நாமக்கல்
பரமத்தி வேலூர்
திருச்செங்கோடு
குமாரபாளையம்
ஈரோடு (கிழக்கு)
ஈரோடு (மேற்கு)
மொடக்குறிச்சி
தாராபுரம் (தனி)
காங்கேயம்
பெருந்துறை
பவானி
அந்தியூர்
கோபிச்செட்டிப்பாளையம்
பவானிசாகர்
உதகை
கூடலூர்
குன்னூர்
மேட்டுப்பாளையம்
அவிநாசி (தனி)
திருப்பூர் (வடக்கு)
திருப்பூர் (தெற்கு)
பல்லடம்
சூலூர்
கவுண்டம்பாளையம்
கோயம்புத்தூர் (வடக்கு)
தொண்டாமுத்தூர்
கோயம்புத்தூர் (தெற்கு)
சிங்காநல்லூர்
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி
வால்பாறை
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம்


அதிமுகவின் பலமான மண்டலமாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் இம்முறை அதிமுகவிற்கு சரிவு ஏற்படும் என்கிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள். கடந்தமுறை கொங்கு மண்டலத்தில் 42 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக கூட்டணி , இம்முறை 17 முதல் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் கடந்த 2016 தேர்தலில் 10 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற திமுக, இம்முறை 33 முதல் 35 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2016-இல் கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது அதிமுக 24 தொகுதிகளை கொங்கு மண்டலத்தில் இழக்கிறது. அதே நேரத்தில் திமுக 24 தொகுதிகளை கூடுதலாக பெறுகிறது என்கிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு. 46.8 சதவீதம் வாக்குகளை இந்த மண்டலத்தில் கடந்த முறை பெற்ற அதிமுக, இம்முறை 38.6 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது. 36.9 சதவீதம் வாக்குகளை பெற்ற திமுக, இம்முறை 43.9 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. இது திமுகவுக்கு பெரிய அளவிலான சாதகத்தை ஏற்படுத்துகிறது. இங்கு அமமுக 3.2 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட மற்ற கட்சியினர் 14.3 சதவீதம் வாக்குகளை பெறுகின்றனர். 




வட தமிழக மண்டலம்


கும்மிடிப்பூண்டி
பொன்னேரி
திருத்தணி
திருவள்ளூர்
பூந்தமல்லி
ஆவடி
மதுரவாயல்
அம்பத்தூர்
மாதவரம்
திருவொற்றியூர்



சோழிங்கநல்லூர்
ஆலந்தூர்
ஸ்ரீபெரும்புதூர்
பல்லாவரம்
தாம்பரம்
செங்கல்பட்டு
திருப்போரூர்
செய்யூர்
மதுராந்தகம்
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்
அரக்கோணம்
சோளிங்கர்
காட்பாடி
ராணிப்பேட்டை
ஆற்காடு
வேலூர்
அணைக்கட்டு
கே.வி.குப்பம்
குடியாத்தம்
வாணியம்பாடி
ஆம்பூர்
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர்



பென்னாகரம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி
அரூர்
செங்கம்
திருவண்ணாமலை
கீழ்பெண்ணாத்தூர்
கலசபாக்கம்
போளூர்
ஆரணி
செய்யாறு
வந்தவாசி



கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வட தமிழக மண்டலத்தில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை அதன் எண்ணிக்கையை திமுக அதிகரித்திருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றிபெறுகிறது. அதே போல 25 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 2021 தேர்தலில் 36 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற தொகுதிகளின் ஒப்பீடு படி அதிமுக 13 இடங்களை இழக்கிறது. அதே நேரத்தில் திமுக 12  இடங்களை கூடுதலாக பெறுகிறது. 2016-இல் இங்கு 40.2 சதவீதம் வாக்குகளை பெற்ற அதிமுக, இம்முறை 31.5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது. அதே நேரத்தில் 39.2 சதவீதம் வாக்குகளை மட்டும் கடந்தமுறை பெற்றிருந்த திமுக, 51.6 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. இது அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு பெரிய அளவில் உதவுகிறது. அமமுக 2.7 சதவீதம் வாக்குகளை இங்கு பெறுகிறது. இங்கு பிற கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறைகிறது.  14.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே பிற கட்சிகள் பிரிக்கிறார்கள். 


தென் தமிழக மண்டலம்


பழனி
ஒட்டன்சத்திரம்
ஆத்தூர்
நிலக்கோட்டை
நத்தம்
திண்டுக்கல்
வேடசந்தூர்



காரைக்குடி
திருப்பத்தூர்
சிவகங்கை
மானாமதுரை
மேலூர்
மதுரை கிழக்கு
சோழவந்தான்
மதுரை வடக்கு
மதுரை தெற்கு
மதுரை மத்தி
மதுரை மேற்கு
திருப்பரங்குன்றம்
திருமங்கலம்
உசிலம்பட்டி
ஆண்டிப்பட்டி
பெரியகுளம்
போடிநாயக்கனூர்
கம்பம்
ராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
சாத்தூர்
சிவகாசி
விருதுநகர்
அருப்புக்கோட்டை
திருச்சுழி
பரமக்குடி
திருவாடானை
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்
விளாத்திகுளம்
தூத்துக்குடி
திருச்செந்தூர்
ஸ்ரீவைகுண்டம்
ஓட்டப்பிடாரம்
கோவில்பட்டி
சங்கரன்கோவில்
வாசுதேவநல்லூர்
கடையநல்லூர்
தென்காசி
ஆலங்குளம்
திருநெல்வேலி
அம்பாசமுத்திரம்
பாளையங்கோட்டை
நாங்குநேரி
ராதாபுரம்
கன்னியாகுமரி
நாகர்கோவில்
கொளச்சல்
பத்மநாபபுரம்
விளவங்கோடு
கிளியூர்





எப்போதும் அதிமுகவிற்கு சாதகமான மண்டலமாக பார்க்கப்படும் மதுரையை மண்டலமாக கொண்ட தென் தமிழக மண்டலத்தில் இம்முறை அதிமுக சிறிய அளவிலான சரிவை சந்திக்கிறது. கடந்த முறை 32 இடங்களில் வெற்றிபெற்ற 21 முதல் 23 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 26 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, இம்முறை 33 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த முறை அதிமுகவின் சரிவுக்கு அமமுக காரணமாகிறது. அதுமட்டுமின்றி தென் தமிழக மண்டலத்தில் 2 இடங்களில் அமமுக வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. கடந்த 2016 தேர்தலுடன் ஒப்பிடும்போது 10 தொகுதிகளை அதிமுக இழக்கிறது. அதே நேரத்தில் முன்பு பெற்றதை விட கூடுதலாக 8 தொகுதிகளை பெறுகிறது திமுக. 45.9 சதவீதமாக இருந்த அதிமுகவின் ஓட்டு சதவீதம், இம்முறை 39 சதவீதமாக குறைகிறது. 39.5 சதவீதமாக இருந்த திமுகவின் வாக்கு சதவீதம், 40.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இங்கு அதிகபட்சமாக அமமுக 4.6 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. மற்ற கட்சிகள் 15.7 சதவீதம் வாக்குகளை பெறுகின்றனர். 


மண்டல வாரியாக கிடைத்திருக்கும் வெற்றி வாய்ப்புகளின் அடிப்படையில் இம்முறை திமுக ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த முறை வெளியான கருத்துக்கணிப்புகளுடன், தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை ஒப்பிடும்போது இந்த தரவுகள் கிடைக்கிறது. இந்த கருத்துக்கணிப்பில் அதிமுக பெரிதும் நம்பிய கொங்கு மண்டலமும், தென் தமிழக மண்டலமும் இம்முறை திமுகவுக்கு சாதகமாக மாறியிருப்பது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதித்திருக்கிறது என்கிறது ABP நாடு, ‛சி வோட்டர்’ நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு. 


கருத்துக்கணிப்புகள் முடிவுகள் எல்லாம் திமுகவுக்கே சாதகமாக உள்ளது. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்ததன் காரணமாக கருத்துகணிப்புகளில் திமுக முந்தியிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. எதுவாகியிருப்பனும் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பு இன்று தெரிந்துவிடும். நாடு எதிர்கொண்டிருக்கும் பெருந்தொற்றுச் சூழலை சமாளிக்கும் அரசு திறனுடன் செயல்பட்டால், மக்களின் தீர்ப்புக்கு அவர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக இருக்கும்.