தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர் பட்டியல்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். அதே போல் திமுக சார்பிலும் இது வரை நான்கு பாகங்களாக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிதம்பரம் நகர திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை சிதம்பரத்தில் நடந்தது. இதில் திமுக. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். யாரும் எதிர்பாராத வகையில் திமுக நகர செயலாளர் செந்தில்குமார் சிதம்பரம் நகரில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வார்டு விபரங்கள் மற்றும் வேட்பாளர் விவரங்களை வெளியிட்டார். மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 25 இடங்களில் போட்டியி டுகிறது. காங்கிரசுக்கு 3 வார்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், மற்றொரு கூட்டணி கட்சிக்குதலா ஒரு வார்டும். ஒதுக்கப்பட்டது. திடீர் திருப்பமாக தேமுதிகவுக்கு ஒரு வார்டு தர உடன் பாடு ஆனது. இதையடுத்து தேமுதிக வை சேர்ந்த குணசுந்தரி முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தமிழகம் முழுவதும் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தேமுதிக, திமுக வுடன் கூட்டணி வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே போன்று கடலூர் மாநகராட்சி பகுதியிலும் தேமுதிக, திமுக வுடன் மறைமுக கூட்டணி வைத்து கொண்டு கடலூர் மாநகராட்சியின் 5 வது வார்டில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மனு தாக்கல் செய்யபட்டு உள்ளது. இதில் கடலூர் தேமுதிகவை சேர்ந்த லெனின் என்பவரின் தாயார் பார்வதி வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.
ஏற்கனவே கடலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் 5 வார்டு பகுதியை சேர்ந்த நளினி என்பவரை நேர்காணல் செய்த நிலையில் அவரை அறிவிக்காமல் அந்த வார்டில் மாற்று கட்சி வேட்பாளரை அறிவித்ததாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்தில் கூச்சல் போட்டனர்.