பாரதிய ஜனதா கட்சி அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ என மூன்று துறையையும் ஒரு கருவியாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறது. நீதிமன்றங்களுக்கு, ஆளும் பாஜக மூலம் அச்சுறுத்தல் தருவதாக சிபிஎம் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்தார்.


RCB vs SRH LIVE Score: மிரட்டும் ஹெட் - அபிஷேக்.. கதி கலங்கும் பெங்களூரு பவுலிங்!


பழனிக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வழக்கமாக தேர்தல் பரப்புரைகளில் மக்கள் திரளுவார்கள் ஆனால் இந்த முறை ஒரு எழுச்சியோடு மக்கள் கூடுகிறதை பார்க்க முடிகிறது. பத்தாண்டு காலம் மோடி அரசின் மீது எந்த அளவிற்கு மக்களுக்கு வெறுப்புணர்வு உள்ளது என்பதை தேர்தல் பரப்புரையில் காண முடிவதாக தெரிவித்தார்.


IPL 2024 RCB vs SRH: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா கம்மின்ஸ் படை? டாஸ் வென்ற ஆர்.சி.பி பவுலிங் தேர்வு!




சாதி மதங்களைக் கடந்து மக்கள் மோடி அரசை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்து விட்டதாகவும், பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்கள் தினமும் சந்திக்கின்ற விலைவாசி உயர்வு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை, நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது இதைப் பற்றி எல்லாம் தேர்தல் அறிக்கையில் பாஜக கூறவில்லை. அவர்கள் முன்மொழிந்துள்ளது ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் இவை தான். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு ஒரே திட்டத்தை கொண்டு வரும் என்றால் 5 ஆண்டு ஆட்சி காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடக்குமா என கேள்வி எழுப்பி உள்ளார்.


ஆஹா என்ன வரிகள் 2: "மெத்த வாங்குனேன் தூக்கத்தை வாங்கல..." ஆறுதலாக வருடும் பூங்காற்று திரும்புமா!


பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தேர்தலில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை ஆனால் அண்ணாமலை அனைத்து வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டதாக பொய் கூறி வருவதாக பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடையும் என்றார். பாரதிய ஜனதா கட்சியில் அமலாக்கத்துறை, வருமானத்துறை, சிபிஐ இந்த மூன்று துறைகள் மட்டுமே செயல்படுகிறது. அதுவும் எதிர்க்கட்சிகளை எதிர்க்கட்சிகளின் முதல்வர்களை அச்சுறுத்துவதற்கு சிறையில் அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி மூலமாக அச்சுறுத்தல்கள் வருவதாக பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.