மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணி காலை 8 மணி மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலையில் உள்ளார்.
தி.மு.க. கூட்டணி - விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) -4,50,401
அ.தி.மு.க. கூட்டணி- சிவக்கொழுந்து (தேமுதிக) -2,67,707
பா.ம.க. - தங்கர்பச்சான் - 2,02,372
நா.த.க. - மணிவாசகன் - 56,863
கடலூர் மக்களவைத் தொகுதியின் நிலவரம் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடலூர் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு அந்த தொகுதியின் விவரங்களை காணலாம்.
கடலூர் மக்களவைத் தொகுதி:
இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
- கடலூர்
- பண்ருட்டி
- விருதாச்சலம்
- நெய்வேலி
- திட்டக்குடி (தனி)
- குறிஞ்சிபாடி
கடலூர் தொகுதி வாக்காளர்கள் விவரம்
மொத்த வாக்களார்களின் எண்ணிக்கை - 14,01,392
ஆண் வாக்காளர்கள் - 6,88,269
பெண் வாக்காளர்கள் - 7,12,909
மூன்றாம் பாலின வாக்காளர்கள் - 214
வேட்பாளர்கள் விவரம்
தி.மு.க. கூட்டணி - விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்
அ.தி.மு.க. கூட்டணி- சிவக்கொழுந்து (தேமுதிக)
பா.ம.க. - தங்கர்பச்சான்
நா.த.க. - மணிவாசகன்
பதிவான வாக்குகளின் விவரம்
இந்த தொகுதியில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 762 வாக்குகள் பதிவாகின. 71.68 சதவீதமாக இருந்தது. இந்தத் தொகுதியில் யார் வெற்று பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.