கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுகவும் ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது.
Coimbatore Election Results 2022 | கோவை மாவட்டத்தில் வால்பாறை நகராட்சியை கைப்பற்றியது திமுக
கதிரவன் | 22 Feb 2022 09:20 AM (IST)
மொத்தமுள்ள 21 வார்டுகளில் 11 வார்டுகளை கைப்பற்றியது திமுக
வால்பாறை நகராட்சி