தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 1 மற்றும் 2ஆவது வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியில் திமுக வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. 




ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!




நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பெரிய நெகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


தேர்தலுக்கு முன்பே பெரிய நெகமம் பேரூராட்சியை போட்டியின்றி பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றியது. இதனால் மீதமுள்ள 802 பதவிகளுக்கு கடந்த 19 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 3 ஆயிரத்து 366 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 23 இலட்சத்து 88 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க இருந்தனர். 



கோவை மாவட்டத்தில் நடந்த தேர்தலில் மொத்தம் 59.61 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாநகராட்சி பகுதியில் 53.61 சதவீதமும், நகராட்சிகளில் 67.09 சதவீதமும், பேரூராட்சிகளில் 73.83 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நகரப்பகுதிகளை விட கிராமப்பகுதிகளில் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 17 மையங்களில் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரு இடத்திலும், 7 இடங்களில் நகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும், 9 இடங்களில் பேரூராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண