கரூர் மாநகராட்சி 48 வார்டுகள் கொண்ட பகுதி ஆகும். இதில் 22-வது வார்டு பகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரேமா சங்கர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்நிலையில் மாநகராட்சி தேர்தல் 47 வார்டுகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் 91 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 22.02.2022 அன்று வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது. காலை 8 மணிக்கு கரூர் அரசு கலைக் கல்லூரி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநகராட்சி பகுதியில் 47 -வார்டுகளுக்குகான வாக்கு எண்ணும் பணி துவங்க உள்ளது. இந்த மாநகராட்சி தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை -1,84,000 இதில் மாநகராட்சி தேர்தலில் 47 வார்டுகளில் பதிவான வாக்காளர்கள் வாக்கு எண்ணிக்கை - 1,39,547. இந்நிலையில் இதில் ஆண் வாக்காளர்கள் வாக்கு - 66,614. பெண் வாக்காளர்கள் -72,924 மூன்றாம் பாலினம் வாக்காளர் வாக்கு -9. கரூர் மாநகராட்சியில் வாக்கு சதவீதம் -75.84%.
இந்நிலையில் கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்திக்க இருப்பதால் மேயர் பதவிக்கான போட்டி தற்போது கடுமையாக நிலவுகிறது. திமுக கட்சியை பொறுத்தவரை மேயர் பதவிக்கு தற்போது போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள பிரேமா சங்கர், முன்னாள் சேர்மன் கவிதா கணேசன், இளம் வேட்பாளர் என 3 பெயர் மேயர் பதவிக்கு அடிபட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இந்த 3 திமுக வேட்பாளர்களை யாரை கை காட்டுகிறாரோ அவருக்கு இந்த வாய்ப்பு அதிகம்.
அதேபோல், அதிமுக மேயர் பதவிக்கு 12 வது வார்டு பகுதியில் போட்டியிடும் வேட்பாளரான கனிமொழிக்கும், 43-வது வார்டு பகுதியில் போட்டியிடும் மாரியம்மா ராம்குமாரும் வாய்ப்புகள் உள்ளது. எனினும், கரூர் மாநகராட்சியை கைப்பற்ற திமுகவே அதிக அளவில் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகள் தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரிகள் 3 அடுக்கு பாதுகாப்புடன்,24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா உடன், துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு பணியில் உள்ளனர். 1 டிஎஸ்பி, 2 எஸ்ஐ , 35 க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் வாக்குப் பெட்டிகளை பாதுகாத்து வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்ட பிறகு, அதன் தொடர்ச்சியாக 47-வார்டு பகுதிக்கான வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
இந்நிலையில் திமுகவில் இளம் வேட்பாளர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆளும் அரசு பொய் வழக்குப்போட்டு மிரட்டுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கோவையில் முகாமிட்டு இருந்தாலும், நாள்தோறும் கரூர் மாவட்டத்தில் நடக்கும் தேர்தல் நிலவரம் குறித்து புள்ளிவிவரங்களுடன் சேகரித்து வருகிறார்.
கரூர் மாநகராட்சி 48- வார்டு பகுதியில் 1 வார்டு பகுதிக்கு தற்போது வேட்பாளர் திமுக வெற்றி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 47 வார்டுகளில் குறைந்தது 40-வார்டு தட்டிப்பறிக்க ஆளும் திமுக அரசு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆலோசனைப்படி மாவட்ட நிர்வாகிகள் இரவு, பகல் பாராமல் பணியாற்றியுள்ளனர்.
கரூர் மாநகராட்சித் தேர்தலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் 48 வார்டுகளில், அதில் குறிப்பாக 30 வார்டுகள் முதல் 35 வார்டுகள் வரை திமுக கைப்பற்றும் எனவும், அதேபோல் அதிமுக 10 வார்டுகளில் வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கரூர் மாநகராட்சியில் 5-வார்டுகளில் அதிமுக - திமுக இழுபறி காணப்படுகிறது.