கோவை மாநகராட்சி 92வது வார்டில் திமுகவைச் சேர்ந்த வெற்றிச் செல்வன் வெற்றி. அதிமுக வேட்பாளர் செல்லப்பனை விட 456 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.






தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் படிக்க: TN Urban Election Results 2022 LIVE: அனைத்தையும் கைப்பற்றும் திமுக... எத்தனை இடங்களை பெறப்போகிறது அதிமுக? அப்டேட் இதோ!


அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கோவை மாவட்டத்திலும் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளும் திமுக வசமாகியுள்ளது. மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகள் திமுக கைப்பற்றி அசத்தியுள்ளது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக வென்றுள்ளது. மோப்பிரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 7 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் தாளியூர், புலுவப்பட்டி, பேரூர், வேடப்பட்டி, ஆலாந்துறை, தென்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய 7 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 7 பேரூராட்சிகளிலும் ஒற்றை இலக்க இடங்களை மட்டுமே பிடித்து அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. 


அதே போல, எஸ். பி வேலுமணியின் சொந்த வார்டான 92வது வார்டில் அதிமுக வேட்பாளர் செல்லப்பனை விட 456 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண