தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆவடி மாநகராட்சி 14வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜேஷ் குமார் திமுக ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.
வெற்றிபெற்ற உடனே அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், மதியம் 1.30 மணியளவில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற இடங்களின் விவரத்தை கீழே விரிவாக காணலாம்.
இதுவரை 1,374 மாநகராட்சிக்கான வார்டு உறுப்பினர் பதவிகளில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க. 267 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சியினர் 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 3 ஆயிரத்து 843 பதவிகளுக்கான இடங்களில் 1,872 பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், தி.மு.க. 1,156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 307 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 76 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தே.மு.தி.க. 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 268 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான மொத்தமுள்ள 7 ஆயிரத்து 621 இடங்களில் 6 ஆயிரத்து 361 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. அவற்றில் தி.மு.க. 3 ஆயிரத்து 769 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 1,063 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 258 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 131 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு 58 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தே.மு.தி.க. 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பி.எஸ்.பி. 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 1,084 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்