திருப்பூர் அவினாசியில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின்:
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையிஅப்போது பேசிய முதலமைச்சர், நீலகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும். ரயில்வேயில் கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும். விவசாய கடன்கள் வட்டியுடன் சேர்த்து ரத்து செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்த தேர்தலானது, ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறும் தேர்தல். சமூக நீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி. சமூக நீதியை காப்போருக்கும் எதிர்ப்போருக்குமான 2 தத்துவங்களுக்குமான இடையிலான தேர்தல்.
இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு அரசியலமைப்பு சட்டம்தான் காரணம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார். சர்வாதிகார நாடாக மாறிவிடும் .
கடன் அதிகரிப்பு:
மோடி அரசை வீட்டுக்கு அனுப்பதான் இந்தியா கூட்டணி அமைத்துள்ளோம்.
பிரதமர் 10 ஆண்டுகால ஆட்சியில், இந்தியா பல துறைகளில் பின்தங்கியுள்ளது. பிரதமர் மோடி சொன்ன புதிய இந்தியாவில் 32% மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர். 55 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் மோடியின் ஆட்சியில் ரூ. 158 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
10 ஆண்டுகள் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், பிரச்சாரத்தில் சாதனைகளை மோடியால் கூறமுடியவில்லை. தமிழ்நாடு ரூ.1 கொடுத்தால், 29 பைசா மட்டுமே வரிப்பகிர்வாக கொடுக்கிறது மோடி அரசு.
பாஜக ஆட்சியில், தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு சென்றுவிட்டன. திமுக அரசின் திட்டங்களால், நேரடியாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 50, 000 போய் சேருகிறது.
மோடி ஆட்சியில் விலை உயர்வு அதிகரித்துள்ளது. பிரதமரின் 10 ஆண்டுகால ஆட்சியில் உலக பட்டினி குறியீட்டில் 111வது இடத்தில் இந்தியா உள்ளது.
Also Read: Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!