2024ஆம் ஆண்டுக்கான மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது எனவும் இதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது எனவும் இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 


2024ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது. ஒடிசா, ஹரியானா, ஆந்திர பிரதேசம், அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. 


 மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்திற்கு சட்டமன்ற பொதுத் தேர்தல்  நடத்தப்படுவது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜீவ் குமார், ” 50 சதவீத ஓட்டுச்சாவடிகளுக்கு மேல் 'வெப் காஸ்டிங்' வசதி இருக்கும். 37809 ஓட்டுச்சாவடிகளில், 22,685 ஓட்டுச்சாவடிகளில், 'வெப்காஸ்டிங்' ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்குச் செலுத்தும் மையங்களில் மாற்றுத்திறனாளிகள், முதல் முறை வாக்கு செலுத்தும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் முக்கிய கவனம் செலுத்தப்படுவார்கள். மேலும் 300 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளி அதிகாரிகள் நிர்வகிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.