சென்னை 136 வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்தது விஜய் மக்கள் இயக்கம். தலைநகரின் வார்டு ஒன்றில் அதிமுகவையே பின்னுக்கு தள்ளியதால் விஜய் மக்கள் இயக்கம் கவனம் பெற்றுள்ளது
கோடம்பாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை வார்டு 136ல் திமுக வேட்பாளர்
நிலவரசி துரைராஜ், 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர்பெற்ற வாக்குகள் 7,222ஆகும். கடும் போட்டியாக பார்க்கப்பட்ட அதிமுக லஷ்மி கோவிந்தசாமி 1137 வாக்குகள் மட்டுமே பெற்றார். யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட அறிவுச்செல்வி 5,112 வாக்குகள் பெற்று கவனிக்க வைத்துள்ளார். நான்காவது இடத்தில் நாம் தமிழரும், 5 வது இடத்தில் பாஜகவும், ஆறாவது இடத்தில் மக்கள் நீதி மய்யமும் இடம் பிடித்துள்ளது.
இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட அறிவுச்செல்வியின் கணவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் எனக் கூறப்படுகிறது. உட்கட்சி பிரச்னையால் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மனைவியை களம் இறக்கியதாகவும், அந்த வகையிலேயே அதிகளவில் வாக்குகள் பெற முடிந்ததாகவும் அம்மண்டல அதிமுக தொண்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க : TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!