திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியில் 22 வயது இளம் வேட்பாளர் சினேகா வெற்றி பெற்றுள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 


இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். வார்டு 5ல் போட்டியிட்ட 22 வயது இளம் வேட்பாளர் சினேகா 494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரின் வெற்றி அந்த வார்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சில நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


தற்போதைய நிலவரப்படி:  


திருச்சி மாநகராட்சி: 


வார்டு 3- திமுக வேட்பாளர்- செல்வி வெற்றி


வார்டு 9- திமுக வேட்பாளர்- நாகலட்சுமி வெற்றி 


வார்டு 18- திமுக வேட்பாளர்- சண்முகபிரியா வெற்றி


வார்டு 30- மதிமுக வேட்பாளர்- கதிஜா வெற்றி 


வார்டு 29- திமுக வேட்பாளர்- கமால் முஸ்தபா


வார்டு 39- காங்கிரஸ் வேட்பாளர்- ரெக்ஸ் வெற்றி 


வார்டு 44- திமுக வேட்பாளர்- பியுலா மாணிக்கம் வெற்றி 


வார்டு 58- திமுக வேட்பாளர்- கவிதா செல்வம் வெற்றி


வார்டு 8- திமுக வேட்பாளர்- பங்கஜம் மதிவாணன் வெற்றி 


வார்டு 41- காங்கிரஸ் வேட்பாளர் - கோவிந்தராஜன் வெற்றி
 
வார்டு 27- திமுக வேட்பாளர்- அன்பழகன் வெற்றி


வார்டு 31- காங்கிரஸ் வேட்பாளர்- சுஜாதா வெற்றி


வார்டு 6- திமுக வேட்பாளர்- கலைமணி வெற்றி 


வார்டு 15- திமுக வேட்பாளர்- தங்கலெட்சுமி வெற்றி


வார்டு 47- அமமுக வேட்பாளர்- செந்தில்நாதன் வெற்றி
 
வார்டு 65- இந்திய கம்யூ கட்சி வேட்பாளர்- ராஜா வெற்றி


தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண