நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் திமுக வேட்பாளர் கே.தனசேகரன். 


கடந்த 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.


தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 


Chennai Corporation : சென்னையில் இத்தனை வார்டுகளில் பாஜகவுக்கு 2வது இடமா? அதிமுகவை பின்னுக்கு தள்ளியது எப்படி?


தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.


அதிமுகவின் கோட்டையாக விளங்கிய பல பகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வைத்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 178 வார்டுகளையும், 2360 நகராட்சி வார்டுகளையும் , 4388 பேரூராட்சி வார்டுகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.


அதிக இடங்களை கைப்பற்றி சாதனை திமுக, அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற நபராகவும் திமுகவைச் சேர்ந்தவராக இருக்கிறார். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் கே.தனசேகரன்.  சென்னை மாநகராட்சி 137ஆவது வார்டில் போட்டிட்ட கே. தனசேகரன் 15568 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். போட்டியிட்டவர்களை விட 10583 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.


திமுக -15568, அதிமுக-4985, பாஜக - 2629. வெற்றி வித்தியாசம்: 10583


தமிழ்நாட்டிலேயே அதிக வித்தியாசத்தில் வென்ற ஒரே நபர் தனசேகரன் மட்டுமே. அவருக்கு சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ஆவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக  இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.


AMMK Election Results: பிரச்சாரமே செய்யாமல் சதத்தை பெற்ற டிடிவி தினகரன்... அடுத்த இன்னிங்ஸிற்கு தயாராகும் அமமுக!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண