நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான வழிமுறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



 

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சி அதிமுக சார்பில் 17வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாலாஜி என்பவர், அப்பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் டீ போட்டுக் கொடுத்தும், பானி பூரி போட்டு கொடுத்தும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வித்தியாசமான அணுகுமுறை வாக்கு சேகரித்தார்.  செங்கல்பட்டு மொத்தம் 33 வார்டுகள் உள்ளன, நகரத்தில் பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வருவதால் செங்கல்பட்டு நகராட்சி முழுவதும் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. காலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டில் இருப்பார்கள் என்பதால் பிரச்சாரங்கள் காலை மற்றும் மாலை நேரத்தை குறிவைத்து வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



 


 

செங்கல்பட்டு நகராட்சி 

 

சரியாக 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கல்பட்டு நகராட்சியானது பெரியநத்தம், சின்ன நத்தம், குண்டூர், அனுமந்தபுத்தேரி மற்றும் மேலமையூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பஞ்சாயத்தாக 1886-ம்ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது1972-ம் தேதியிட்ட அரசாணை எண் 169-ன்படி 2-ம்நிலை நகராட்சியாகவும்,1984-ல்இருந்து முதல்நிலை நகராட்சியாகவும் மேம்படுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 62,579 ஆக இருந்த மக்கள் தொகை, தற்போது சுமார் 1 லட்சமாகி இருக்கும் எனக் கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6.09 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட செங்கல்பட்டு நகராட்சியானது 300 தெருக்களை உள்ளடக்கிய 33 வார்டுகளோடு உள்ளது.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர