கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது ஆண்டாய்ட் டெவலப்பர்களுக்கு இதன் முதல் பதிப்பு அறிமுகமாகியுள்ளது. இதனை டெவலப்பர்ஸ் பயன்படுத்தி பார்த்துவிட்டு , ஏதேனும் நிறை குறைகள் இருந்தால் மாற்றங்களை செய்வார்கள். ஒவ்வொரு முறையும் ஆண்ட்ராய்டுக்கான புதிய இயங்குதள அப்டேட்டின் பெயர் உணவு பொருட்களின் பெயரை அடிப்படையாக கொண்டு வெளியாகும் . தற்போது டெவலப்பர்ஸ்களுக்கு ஆண்ட்ராய்ட் 13 இன் முதல் பதிப்பு அறிமுகமானாலும் அதன் பெயர் குறித்த சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. என்றாலும் முன்னதாக வெளியான தகவலின் அடிப்படையில் அது 'டிராமிசு' என்ற பெயரை கொண்டிருக்கலாம். ‘Tiramisu’ என்பது காஃபி ஃபிளேவர் கொண்ட , சாண்விச் போன்ற ஒரு இத்தாலியன் உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பதிப்பு இம்மாதம் அறிமுகமாகியுள்ள நிலையில் , அடுத்த மாதம் இரண்டாம் பதிப்பு அறிமுகமாகலாம் என கருதப்படுகிறது. அதன் பின்னர்ஆண்ட்ராய்ட் 13 இன் பீட்டா வெர்சனை வருகிற ஏப்ரம் மாதம் சில பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்துவார்கள் என தெரிகிறது. ஜூலை மாதத்திற்கு பிறகு அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் புதிய ஆண்ட்ராய்ட் வெர்சன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆண்ட்ராய்ட் ஒவ்வொரு முறையும் தனது பயனாளர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இம்முறை ஃபோட்டோ பிக்கர் என்னும் புதிய வசதியை ஆண்ட்ராய்ட் 13 இல் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. இதன் மூலம் பயனாளர்கள் கிளவுட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. புகைப்படங்கள் மட்டுமல்லாது வீடியோ, ஆடியோ , ஆவணங்கள் என அனைத்து மீடியாக்களையும் பகிர்ந்துக்கொள்ளலாம். அதன் பிறகு Nearby device permission for Wi-Fi என்னும் வசதியும் புதிதாக அறிமுகமாகியுள்ளது.
ஆண்ட்ராய்ட் தனது டெவலப்பர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போதைய ஆண்ட்ராய்ட் 13 பதிப்பை பயனாளர்கள் சோதிக்க விரும்பினால் (Pixel 6 Pro, Pixel 6, Pixel 5a 5G, Pixel 5, Pixel 4a 5G, Pixel 4a, Pixel 4, Pixel 4 XL பயனாளர்கள் மட்டும் ) https://developer.android.com/about/versions/13/get#on_pixel என்னும் இணையதள முகவரிக்கு சென்று டெமோ வெர்சனை பயன்படுத்தி பார்க்கலாம்.