உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 












கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பிறகு காலை 9.30 மணி நிலவரம் இதுதான். 






கோவாவில் உள்ள 40 இடங்களில், பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ்13 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதனை அடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.  


கோவா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் பின்னடைவை சந்தித்திருக்கிறார். பனாஜி தொகுதியில் போட்டியிட்ட அவர், பின்னடைவை சந்தித்திருப்பதால், பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார்.


கோவா மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும், எம்ஜிபி கூட்டணி 3 இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். 


2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி கோவாவில் காங்கிரஸ் கட்சி 12 முதல் 16 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 13 முதல் 17 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி  1 முதல் 5 இடங்களும், என்ஜிபி கூட்டணி 5 முதல் 9 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது கோவாவில் யார் ஆட்சி அமைப்பதில் இம்முறை சுயேட்சைகளின் பங்கு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் படிக்க: Election Results 2022 LIVE: 5 மாநிலங்களில் யார் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள்...? உடனுக்குடன் தகவல்கள் ! 














மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண