Election Results 2022 LIVE: மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம் - பிரதமர் நரேந்திர மோடி
Assembly Election Results 2022 LIVE Updates: 5 மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகளை இங்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
ரஷ்ய- உக்ரைன் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 117 தொகுதிகளுக்கும் முடிவுகளை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது. அங்கு ஆட்சியமைக்க 59 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் மனதில் நாம் இடம்பிடித்திருக்கிறோம் என பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். பாஜக அரசு மீதுள்ள மக்களின் நம்பிக்கை இந்த வெற்றி காண்பிக்கிறது என்றும் கூறினார்.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
கோவா சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். அடுத்த தேர்தலுக்காக நாளையில் இருந்தே தயாராகுவோம். பாஜக எதிர்ப்பு வாக்குகள் கோவாவில் பிரிந்துள்ளன - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
பஞ்சாப்பில் இனி அரசு அலுவலங்களில் முதல்வரின் படம் இடம்பெறாது. முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனுக்கு பதில் ஒரு கிராமத்தில் நடைபெறும் - முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த்மான்
பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். பாதார், சாம்கவுர் சாகேப் ஆகிய 2 தொகுதிகளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்தார்.
கோவாவில் பாஜக அதிக இடங்களை பெற்றுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மைக்கேல் லோபோ, “நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பினோம். ஆனால் பாஜக 18 இடங்களை பிடித்துள்ளது. நாங்கள் 12 இடங்களை பிடித்துள்ளோம். மக்களின் முடிவை நாங்கள் ஏற்கிறோம். எதிர்க்கட்சியாக எங்களுடைய கடமையை சிறப்பாக ஆற்றுவோம்” எனக் கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் 1 மணி நிலவரப்படி பாஜக ஒரு இடத்தில் வெற்றியும் 21 இடங்களில் முன்னிலையையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த், “கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும். எம்.ஜி.பி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்கும். இந்த வெற்றிக்கு கட்சியின் தொண்டர்கள் ஆற்றிய களப்பணி முக்கிய காரணம்” எனக் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “பஞ்சாப் மாநில மக்கள் ஒரு பெரிய புரட்சியை செய்துள்ளனர். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் தோல்வி அடைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 80 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
கோவா மாநிலத்தில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என்று கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரீஷ் சோடான்கர் தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் சற்று முன்பு வரை பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்தாலும், அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான பிரமோத் சாவந்த் சக்யூலிம் தொகுதியில் தொடர்ந்து பின் தங்கியுள்ளார். அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ் சங்கலானி முன்னிலையில் உள்ளார்.
மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக-12
காங்கிரஸ்-5
ஜனதா தளம்- 4
உத்தராகண்ட் லால்குவா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹரிஷ் ராவத் பின் தங்கியுள்ளதாக தகவல்.
கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 13 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 80 இடங்கள் வரை முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் காங்கிரஸ் கட்சியின் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் சன்கியூலிம் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்தத் தொகுதியில் தற்போது அவர் 400 வாக்குகள் பின் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் பின் தங்கியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பாஜக - 36
காங்கிரஸ் - 30
பகுஜன் சமாஜ் கட்சி - 0
ஆம் ஆத்மி - 1
மற்றவை - 1
கோவா மாநிலத்தின் பனாஜியில் பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
பஞ்சாப்பின் பட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஜித் சிங் முன்னிலை பெற்றுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வரை பாஜக 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 1 இடத்திலும், பிற கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
கோவாவில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
5 மாநில தேர்தலில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முன்னிலை நிலவரம்
மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
கோவா மாநிலம் பனாஜி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட உத்பல் பரிக்கர் முன்னிலை வகித்து வருகிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
உத்தராகண்டில் பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் தற்போது வரை முன்னிலை பெற்றுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் 32 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தராகண்டில் பாஜக ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “இம்முறை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெறும். அடுத்த 2-3 மணி நேரங்களில் உண்மை நிலவரம் தெரியவரும். காங்கிரஸ் கட்சி 48 இடங்கள் வரை கைபற்றும்”எனக் கூறியுள்ளார்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்பதால் கோவாவில் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கும் தபால் வாக்குகள் சென்று அடைந்துள்ளன.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவத் மன் சிங் வீட்டில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு இனிப்பு தயாரிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
கோவா மாநிலத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வாக்கு எண்ணும் மையங்களும் தயார் நிலையில் உள்ளன.
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய ஏபிபி-சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 12 முதல் 16 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. என்.பிஎஃப் 3 முதல் 7 இடங்களும், என்பிபி கட்சி 10 முதல் 14 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மீண்டும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 55 இடங்களையும், பாஜக கூட்டணி 324இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களையும் சுயேட்சைகள் 5 இடங்களிலும் வென்று இருந்தனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களையும், பாஜக 57 இடங்களையும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வென்று இருந்தனர்.
கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5ஆம் தேதியும் நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
உத்தரக்காண்ட் மாநிலத்திலுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10,14,20, 23, 27 ஆகிய தேதிகளிலும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
Background
Assembly Election Results 2022 LIVE Updates
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -