நல்ல நேரம் :


காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


குளிகை:


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம் :


காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை


 


மேஷம் :


 மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாத விவகாரங்களில் உங்களை சிக்கவைக்க சிலர் முயற்சிப்பர். நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். சந்தர்ப்ப சூழல் சுற்றியுள்ளோர் உண்மை முகங்களை வெளிக்காட்டும். சிவபெருமானை வணங்கி மன அமைதி காணலாம்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு தொழிலில் கடும் போட்டி உண்டாகலாம். வியாபாரத்திற்காக திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. நண்பர்கள், அக்கம்பக்கத்தினரடம் கவனத்துடன் பழக வேண்டும்.


மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு செலவு உண்டாகும். இந்த  செலவு சுபச்செலவாகவும், ஆதாயமானதாகவும் இருக்கும். சகோதரர்கள் வழியில் இருந்த பிரச்சினை தீரும். மனதில் இருந்த குழப்பம் அகலும்.


சிம்மம் :


சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு நல்லவர் நட்பு கிட்டும். வீண் விவாதங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தானாக உங்களை விட்டு விலகுவர். மனதில் புது தன்னம்பிக்கை பிறக்கும். புது உற்சாகம் உண்டாகும். சிறப்பான நாளாக இந்த நாள் அமையும்.


கன்னி :


கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி ததும்பும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் ஒன்று நடைபெறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு ஏற்படும். மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும்.


துலாம் :


துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். தொழிலில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல் தீரும். துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பைத் தரும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பெரியவர்கள் அறிவுரைப்படி செயல்படுவது நல்லது. தொழிலில் மற்றும் வேலைவாய்ப்பில் உங்களுக்குரிய அங்கீகாரம் கிட்டும்.


தனுசு :


தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன நிறைவு உண்டாகும். முக்கிய பொறுப்பு ஒன்றை முழுமையாக செய்து முடிப்பீர்கள். வரன்கள் வாயில் வந்து சேரும். வீட்டில் மங்கல சேதி உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.


மகரம் :


மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்கள் உடலில் நீடித்து வந்த உடல்நலக்குறைவு தீரும், கர்ப்பிணி பெண்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சிவபெருமானின் ஆலயத்திற்கு செல்வீர்கள்.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களே வீண் முயற்சி என்று கூறியதை விடா முயற்சி என்று நிரூபிக்கும் நாள். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு அகலும், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.


மீனம் :


மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு தேவையில்லாத கோபம் உண்டாகும். வீண் விவாதங்களில் உங்களை ஈடுபட வைப்பார்கள். ஆனாலும், தவிர்ப்பது நல்லது. முக்கிய் முடிவுகள் எடுப்பதை ஒத்திவைப்பது நல்லது. திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண