மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகியது. இந்தியா கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிகள் இடையே ஆட்சி அமைக்க நடந்த போட்டியில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கிறது.


ஆந்திராவில் வன்முறை:


மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மிகவும் முக்கியமான மாநிலமாக ஆந்திரா கருதப்படுகிறது. ஆந்திராவில் ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் 3வது இடத்தைப் பிடித்தது.


இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியினரே காரணம் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


ஜெகன்மோகன் அச்சம்:


மாநிலத்தில் பதற்றமான சூழலைத் தடுக்க, ஆந்திர மாநில ஆளுநருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கிராமச் செயலகங்கள், ரிசர்வ் வங்கி போன்ற அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் எங்கும் அழிக்கப்படுகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பே தெலுங்கு தேசம் கும்பல் இவ்வாறு செய்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். காவல்துறை மந்தமாகிவிட்டது.






கடந்த 5 ஆண்டுகளாக வலுவாக இருந்த அமைதியும், பாதுகாப்பும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட்டு இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்தி மக்களின் உயிர்கள், உடைமைகள் மற்றும் அரசு உடைமைகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  தெலுங்கு தேசம் கட்சியின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆர்வலர் மற்றும் சமூக ஊடக சிப்பாய்களுடன் நாங்கள் நிற்கிறோம்.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ஆந்திராவில் பதற்றம்:


ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது அந்த மாநிலத்தில் பல வாக்குச்சாவடிகளில் கலவரங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. அப்போது பெரும் பதற்றங்களுக்கு மத்தியில்தான் ஆந்திராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது.


நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 135 சட்டமன்ற தேர்லில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அவருடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பவன்கல்யாணின் ஜனசேனா 21 தொகுதிகளில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றது.  ஆளுங்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.


மேலும் படிக்க: Modi 3.0: மோடியால் இனி இதையெல்லாம் செய்ய முடியாது..! பாஜக ஆட்சி Vs கூட்டணியை நம்பிய ஆட்சி, என்ன வித்தியாசம்?


மேலும் படிக்க: Annamalai: “கருணாநிதி என் அப்பா இல்ல; அப்படி இருந்தா ஜெயித்திருப்பேன்” - பாஜக தலைவர் அண்ணாமலை