நாடாளுமன்ற தேர்தல்...


கடந்த தேர்தலில் இருந்து இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்ட பார்வை இருக்கிறது. வேட்பாளர்களை பார்த்தைவிட, கட்சியை பார்ப்பதை விட அகில இந்திய அளவில் மோடி ஆட்சியை தொடர வைப்பதா? அல்லது தூக்கி எறிவதா? என்கிற கேள்விக்கான விடையை தேடுகிற காலமாக அமைந்திருக்கிறது.


நரேந்திர மோடி ஆட்சி தொடரக்கூடாது..


மாநில அளவில் திமுக, அதிமுக என்கிற இருமுனை போட்டி நிலவும், திமுக தலைமையிலான அணி அதிமுக தலைமையிலான அணி என்கிற அடிப்படையில்தான் விவாதங்களும் நடைபெறும். ஆனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியையும் அதன் தலைமையிலான சங்பரிவார அமைப்புகளையும் எதிராக மக்களிடையே முன்னிறுத்துகிற பிரச்சாரத்தை திமுக கூட்டணி முன்வைக்கிறது. நரேந்திர மோடி ஒட்டுமொத்த தேசத்திற்கும் மக்களுக்கு எதிரான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் அந்த ஆட்சி தொடரக்கூடாது, என்பதை தான் பிரதானமான பிரச்சாரமாக திமுக தலைமைதான கூட்டணி கட்சிகள் முன்வைக்கிறோம்.


சமூக நீதிக்கு எதிரான அரசியல்..


விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, சமூக நீதிக்கு எதிரான அரசியல், சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் என்று பாரதிய ஜனதா மற்றும் சன்பரிவார அமைப்புகள் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வகையில் திமுக கூட்டணியின் பிரச்சாரம் அமைந்துள்ளது.


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் திமுக பிரதானமாக பிரச்சாரத்தில் முன்னிறுத்தவில்லை. ஆகவே இந்த தேர்தல் கடந்த கால தேர்தலாகவே இருக்கிறது விளங்குகிறது.


குடிநீர் பிரச்சனை


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி மிகவும் பின் தங்கிய தொகுதி. விவசாய பெருங்குடி மக்கள் அதிகபடியாக  வசிக்கக்கூடிய பகுதி இந்த பகுதி மக்கள் குடிநீருக்கும் பாசன நீர் வசதி என்பது தான் முன்னெடுத்துகிறார்கள் பிரச்சாரத்தின் போது குடிநீர் கிடைப்பது அரிதாக இருக்கிறது என என்பதே முன் நிறுத்துகிறார்கள் அதன் அடிப்படையில் மக்களோடு கலந்து பேசி அவர்களின் கோரிக்கையை என்னால் முடிந்த அளவிற்கு நிறைவேற்றுவேன்.


40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்


சின்னம் அறிவித்தவுடன் மக்களிடம் போய் சேர்ந்து விட்டது. இப்போதெல்லாம் மக்கள் யார், யாருக்கு என்ன சின்னம் என்பதை தேடுகிறார்கள் தேடிக் கண்டறிந்து வாக்களிக்கிறார்கள். ஓர் அணியில் இருந்த பாமக, பாஜக, தேமுதிக ஆகியவை தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். எனவே அவர்களுடைய  வாக்கு வாங்கி சிதறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. திமுக தலைமையிலான அணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. கூட்டணியின் வாக்குகளும் கட்டுக்கப்பாக இருக்கின்றன. எனவே 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது.


தேர்தல் ஆணையம் நேர்மை தரத்தோடு தேர்தலை நடத்த வேண்டும்


தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. "எங்களுக்கு தேர்தல் சின்னப் பொதுக்குழு அவர்கள் தந்த பதில்  அதிர்ச்சியாக இருந்தது" பிற மாநிலங்களுக்கும் சின்னங்கள் கூறிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது அவர்கள் வைத்து வாதங்கள் கூட எந்த அளவிற்கு அரசு தலையீடு நிறைய இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. தேர்தல் ஆணையம் நேர்மை தரத்தோடு தேர்தலை நடத்த வேண்டும்.


பாரதிய ஜனதா கட்சி நிரந்தரமாக ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி இல்லை என்பதை தேர்தல் ஆணையம் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் ஆளுகிறவர்கள் தூக்கி எறியப்பட வாய்ப்பு இருக்கிறது. தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் ஆளுங்கட்சியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது இதுதான் ஜனநாயகத்தின் முக்கியமான பண்பு இதை உணர்ந்து கொள்ளாமல் தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தவர்கள் ஏதோ பிஜேபி தான் நிரந்தரமாக ஆட்சி இருக்கிற எண்ணத்தோடு செயல்படுகிறது இந்த போக்கு நாட்டிற்க்கு நல்லதல்ல.


அண்ணாமலையின் பேச்சு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது


எங்கள் கட்சித் தோழர்கள் சமூகங்களில் பரப்பியதையே அவரை பின்பற்றி சொல்கிறார். அவர் சொந்தமாக சொல்கிற கருத்து அல்ல "விசிக என்பதை விழுப்புரம் சிதம்பரம் களம் என்று சமூக ஊடகங்களில் பரப்பினார்கள்" விசிக என்பது தொகுதியோடும் களத்தோடும் தொடர்புபடுத்தி பதிவு செய்தார்கள். அண்ணாமலை அதையே திருப்பி சொல்லி இருக்கிறார். அவர் சுயமாக சிந்தித்து இதை சொல்லவில்லை. நாங்கள் விழுப்புரத்திலும் சிதம்பரத்திலும் போட்டியிடுகிற வாய்ப்பைப் பெற்றாலும் தமிழகம் தழுவிய அளவிலும், இந்திய அளவிலும் கொள்கை பார்வை கொண்ட அரசியல் சக்தியை களம் ஆடிக் கொண்டிருக்கிறோம்.  இது அரசியல் களத்தில் உற்று நோக்க கூடிய அனைவரும் அறிந்த ஒரு உண்மை எனவே அண்ணாமலையின் பேச்சு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.