ABP C Voter Exit Poll Results 2022: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. 

Continues below advertisement



இந்நிலையில் இந்தத் தேர்தல் தொடர்பாக ஏபிபி மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை செய்துள்ளது. அந்தக் கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பஞ்சாப்  மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  77 இடங்களையும், பாஜக 3 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களிலும், அகாலி தளம் கூட்டணி 15 இடங்களையும் வென்று இருந்தனர்.




2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 22 முதல் 28 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 7முதல் 13  இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி  51 முதல் 61 இடங்களும்,அகாலி தளம் கூட்டணி 20 முதல் 26 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி இம்முறை ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ABP Cvoter Exit Poll 2022 LIVE: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உடனுக்குடன்..


தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 24 முதல் 30 வரை இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. பாஜக 3 முதல் 11 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆத்மி கட்சி  55 முதல் 63 இடங்கள் வரையும், அகாலி தளம் கூட்டணி 20 முதல் 26 இடங்கள் வரை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அந்த நிலை தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண