திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி சுசிலா. சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவன் இறந்ததால் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுசிலா விறகு வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஓடை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மாலையில் அந்த வழியாக சென்றவர்கள் சுசிலா தலையில் வெட்டு காயத்துடனும் காது அறுந்த நிலையில்  இறந்து கிடப்பதை பார்த்து அதனைப்பார்த்தவர்கள் மங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அறிந்த மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



மேலும் இதுகுறித்த சுசிலாவின் மகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விறகு வெட்ட வந்த மூதாட்டி சுசிலா காதில் அணிந்து வந்த தங்க நாணயங்கள் அறுக்கப்பட்ட நிலையிலும், மேலும் நகைக்காக கொலை நடந்துள்ளதா என காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தினர்.அப்போது மூதாட்டி இறந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் 3 நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் சுசீலா விறகு வெட்டி கொண்டிருந்தார்.



அப்போது அங்கு வந்த அவர்கள் சுசிலாவை தாக்கி காதில் இருந்த 4 கிராம் கம்மலை பறித்து சென்றுள்ளனர். அப்போது 3 சிறுவர்களுடன் போராடிய மூதாட்டி இவர்களால் படுகாயம் அடைந்த சுசிலா உயிரிழந்து தெரியவந்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் 3 சிறுவர்களையும் கைது செய்து, அவர்களை கடலூரில் உள்ள சிறுவா் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.