விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் 3,14,449 ஆண் வாக்காளர்களும், 3,17,330 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 6,31,785 பேர் வாக்களித்தனர். இதில் 83.65 சதவீத வாக்குகள் பதிவானது. இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,95,322 ஆண்வாக்காளர்கள், 1,94,274 பெண் வாக்காளர்கள் மற்றும் 2 மூன்றாம்பாலினத்தவர் உட்பட 3,89,598பேர் வாக்களித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82.25 சதவீத வாக்குகள் பதிவானது.


விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனூர், மயிலம், மரக் காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,379 வாக்குப்பதிவு மையங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் 12 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு 82 பேரும், 135 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 625 பேரும், 316 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு 1239 பேரும், 2337 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 7,009 பேரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணியில் 11,411 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Periyar University: பெரியார் பல்கலை.யில் பல ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் வேந்தர்! சிக்கியது எப்படி?


இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், மைலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட மணிவாசகம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நாகர்கோயில் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், விழுப்புரம் வா.பகண்டை பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பொருளாதார ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் விழுப்புரத்தில் வசித்து வந்த மாணிக்கவாசகம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வீடூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து தேர்தல் பணி செய்து வந்த நிலையில், அதிகாலை சுமார் 2 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.


Salem: தாத்தா பாட்டியை தீயிட்டு கொளுத்திய 16வயது சிறுவன்-அதிர்ச்சி பின்னணி


இதையடுத்து அவரை உடனடியாக அருகேயுள்ள பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் மாணிக்கவாசகம் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மைலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணிக்கவாசகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


 


ஊராட்சி தலைவர் கொரோனாவல் மரணம் - மயிலாடுதுறையில் ஒரே ஒரு ஊராட்சிக்கு மட்டும் வாக்குப்பதிவு