தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை தக்க பிடித்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதற்கான முறைப்படி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.


அது தொடர்பான பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் குறிப்பிட்ட படி அமைச்சகர்கள் பொறுப்பு ஏற்க உள்ளனர். இந்த 33 பேர் கொண்ட பட்டியலில் பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. அதாவது அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த 8 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இணைந்தவர்களாகவும், முன்பே இணைந்தவர்களாக அவர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதிமுகவின் வரவுகள் என்கிற வகையில் அவர்களுக்கான பொறுப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. 


அந்த வகையில் யார், யார் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்து தற்போது வரை அமைச்சர் பொறுப்பை பெற்றுள்ளனர் என்பதை பார்க்கலாம். 


1.எ.வ.வேலு


2.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்


3.எஸ்.ரகுபதி


4.சு.முத்துச்சாமி


5.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்


6.அனிதா ராதாகிருஷ்ணன்


7.செந்தில்பாலாஜி


8.சேகர்பாபு


ஆகிய 8 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முதலில் இடம் பெற்றுள்ள 7 பேரும் ஏற்கனவே அமைச்சர் பொறுப்பு வகித்தவர்கள். சேகர் பாபு மட்டுமே புதிதாக அமைச்சர் பொறுப்பை பெறுகிறார். அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு திமுக தலைமை முக்கியத்துவம் தருவதை, முதல் 4 இடங்களில் உள்ள அமைச்சர் பட்டியலை பார்த்தால் புரியும். தொடர்ந்த இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாய் இணைந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதி காலத்தில் தொடர்ந்த இந்த முறையை தற்போது ஸ்டாலினும் தொடர்கிறார்.