விழுப்புரம்: ஒரே மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துவிடலாம். அதனை நடத்துவதற்கான கட்டாயத்தில் உள்ளோம், இல்லையெனியில் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு பிரச்சனை தான் என செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். 


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி. அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், பாமக வேட்பாளரை ஆதரித்து பசுமை தாயகம் தலைவர் செளமியா அன்புமணி மற்றும் அவரது மகள் சங்கமித்ரா ஆகியோர் விக்கிரவாண்டி நகரபகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். செளமியா அன்புமணியும், சங்கமித்ராவும் நகரத்திலுள்ள வணிக கடைகளில் இருவரும் நடந்தே ஒவ்வொரு கடையாக சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்ககோரி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


அதனை தொடர்ந்து விக்கிரவாண்டியிலிருந்து கிராமபுறங்களுக்கு செல்ல கூடிய பேருந்துகளிலும் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செளமியா அன்புமணி...


விக்கிரவாண்டி தொகுதியில் மக்களுக்கு அரசாங்க வேலை இல்லை, தொழிற்சாலை இல்லை, பேருந்து வசதி இல்லை, சாலை வசதி இல்லை என்பதால் அதனை கொண்டு வருவது தான் முதல் நோக்கம் என்றும் குடிசைகள் உள்ள மாவட்டாமாக பரிதாப நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் உள்ளதாக தெரிவித்தார். அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாரம் மட்டுமே விக்கிரவாண்டியில் இருப்பார்கள் அதன் பிறகு இருக்க மாட்டார்கள், மக்களுக்காக பேசக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை பாமக தான் கொண்டுள்ளதாகவும், சமூக நீதி என்றாலே மருத்துவர் ராமதாஸ் தான், 10.5 இடஒதுக்கீட்டினை வென்றெடுப்போம் என்பது உறுதி என்றும் பாமக குறித்து பெருமையாக கூற 108 ஆம்புலன்ஸ் திட்டம் நிறைய ரயில்கள் கொண்டுவந்தது நாங்கள் தான் என கூறினார்.


தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் எடுக்க வேண்டும் இல்லையெனில் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு பிரச்சனை ஏற்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டினை 9 வது அட்டவனையில் சேர்த்தது ஜெயலலிதா அப்படி சேர்த்தால் தடை செய்யமுடியாது இருபினும் இது தொடர்பாக வழக்கு தொடுத்தால் எப்படி 69 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்புவார்கள் என தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு கத்தி மாதிரி தொங்கிட்டு இருப்பதால் ஒரே நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துவிடலாம் அதனை நடத்துவதற்கான கட்டாயத்தில் உள்ளதாகவும் இல்லையெனியில் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு பிரச்சனை தான் என செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.