மயிலாடுதுறையில் பயிற்சி ஜெட் விமானம் பறக்கும் போது ஏற்படும் தீடீர் பயங்கரவாத சத்தம் காரணமாக மாவட்ட மக்கள் அச்சமடைத்துள்ளர்.
டெல்டா மாவட்டங்களில் தொடரும் சத்தம்
டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது அதீத பயங்கர வெடி வெடிப்பது போன்ற சத்தம் அவ்வப்போது ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் என்ன சத்தம் என்று முதலில் புரியாமல் பீதியடைவார்கள். அதேபோன்று மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த அதீத சத்தம் கேட்டுள்ளது.
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
மயிலாடுதுறையில் ஏற்பற்ற தீடீர் சத்தம்
காலை வேளையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் முதல் ஜெட் விமானம் சோதனை மற்றும் பயிற்சி ஓட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த ஒன்றாக நேற்று ஜெட் விமானம் தாழ்வாக பறக்கும் போதும் மற்றும் விமானத்தில் ஏர் லாக் ரிலீஸ் செய்யும் போதும் சில நேரங்களில் காற்றின் அலை காரணமாக இதுபோன்று சத்தம் ஏற்படும் சாதாரண நிகழ்வுதான் எனவும், ஆகையால் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்தனர்.
விமானப்படை பயிற்சி
மேலும் தஞ்சை விமான படை தளத்தில் உள்ள சகோய்-30 பைட்டர் ஜெட் விமானத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது இது வழக்கமான சோதனை ஓட்டம் தான் என்றும் , அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் இதுபோன்று பல முறை நடைபெற்றுள்ளது என்றும், சிலர் சமூக ஊடகங்களில் விபரம் தெரியாமல் மிகைப்படுத்தி பதிவிடுவதும்தான் அச்சத்திற்கு காரணமாக அமைகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என ராகுல் காந்தி கேட்கலாமே? - செல்லுர் ராஜூ