தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல்  நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுக, விசிக, அமமுக, மக்கள் நீதி மையம் என பல்வேறு கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி முதல் கடைசி நாளன நேற்றுவரை பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். தற்பொழுது கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் 286 பேர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

 



 

மேலும் கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாநகராட்சி முதல் தேர்தல் நடைபெற உள்ளது, இந்த சூழ்நிலையில் கடலூர் மாநகராட்சி உள்ள 45 வார்டுகளில் திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், மற்றும் இதர கட்சிகள் மற்றும்   சுயேச்சை வேட்பாளர்கள் என 286 பேர் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த நிலையில் தற்போது கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சிகள் சார்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ள சூழலில் கடலூர் மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வித்தியாச வித்தியாசமான முறைகளில்  வாக்காளர்களை கவரும் வண்ணத்தில் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 



 

இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக  கடலூர் மாநகராட்சியின் 3வது வார்டில் திமுக சார்பில் பிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார் இவர் வித்தியாசமான முறையில் வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக,  செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பில் காவல் துறையினரின் மேற்பார்வையில் கையில் திமுக சின்னம் ஏந்தி போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு தனக்கு வாக்களிக்க வேண்டுமென வாக்குகளை சேகரித்தார்.அப்பொழுது அவரது கையில் திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என கையில் திமுக சின்னம் பொறித்த அட்டையினை வைத்து கொண்டு, அரை மணி நேரம் செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.