திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கு கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் நேற்று முன்தினம் வரை 1,172 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
Urban Local Body Election | கம்பம் சேர்மேன் சீட்டுக்கு மல்லுக்கட்டும் திமுக நகர செயலாளர்கள்
இந்த நிலையில் நேற்று கடைசிநாள் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் குவிந்தனர். மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாநகராட்சியில் 153 பேரும், 3 நகராட்சிகளில் 310 பேரும், 23 பேரூராட்சிகளில் 1,116 பேரும் என மொத்தம் 1,579 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதன்மூலம் இதுவரை திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கு 338 பேரும், 3 நகராட்சிகளில் உள்ள 75 வார்டுகளுக்கு 511 பேரும், 23 பேரூராட்சிகளில் உள்ள 363 வார்டுகளுக்கு 1,902 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். அந்த வகையில் 486 பதவிகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 751பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேனியில் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 அரசு அதிகாரிகள் கைது
தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அல்லிநகரம், பெரியகுளம், கம்பம், போடி, கூடலூர், சின்னமனூர் என மொத்தம் 6 நகராட்சிகள் உள்ளன. தற்போது நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆறு நகராட்சிகளில் சேர்ந்து மொத்தம் 177 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் உள்ள 177 வார்டுகளுக்கு 966 வேட்பு மனுக்களும், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 வார்டுகளுக்கு 1386 வேட்புமனுக்கள் என மொத்தம் 2352 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்