டிஎன்பிஎஸ்சி 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்ட நிலையில், முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி வெளியாகி உள்ளது. 


இதன்படி, டிசம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வை எழுத உள்ளவர்கள், கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். உரிய ஆவணங்களையும் செலுத்த வேண்டும். இதற்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. 


தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://www.tnpsc.gov.in/document/Certificateverification/04_2024_GR_I_PRLM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே.. 50 நாட்களில் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?