விழுப்புரம்: தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்க அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் கையேடுகளை வழங்கிய விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக கணினி வகுப்பறை, போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் கையேடுகளையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட 21 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உள்ள பண்ணிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வில் எளிமையாக வெற்றிபெறும் வகையில் வினா விடை கையேட்டி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா தன்னுடைய சொந்த செலவில் வழங்கி வருகின்றார்.
நேற்று மாலை விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விழாவில் மாணவ மாணவிகளுக்கு, தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியல் வினா விடை கையேட்டினை வழங்கினார். இதேபோன்று தொகுதி முழுவதும் 21 அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3000 கைட்டினை வழங்கி உள்ளார்.
எந்தவித உதவியாக இருந்தாலும் என்னை தொடர்புகொண்டு கேக்கலாம்
அப்பொழுது விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா... நானும் அரசு பள்ளியில் படித்து தற்போது ஒரு சட்டமன்ற உறுப்பினராகி உள்ளேன். விவசாய மகனாக நான் இளங்கலை பட்டம் பெற்று எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளேன். இது போன்ற வசதி வாய்ப்புகள் நாங்கள் படிக்கும் காலத்தில் இல்லை. இப்போது உள்ள திராவிட மாடல் அரசு மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாக பட்டியலிட்டார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவர்கள் ஐஐடி, மருத்துவம் போன்ற உயர்கல்வி பெறுவதற்கு இந்த கையேடு பயனுள்ளதாக அமையும் என இதனை மாணவ மாணவிகள் பயன்பெற்று கல்வியில் உயர்ந்து 100% வெற்றி பெற வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டார், மேலும் எந்தவித உதவியாக இருந்தாலும் என்னை தொடர்புகொண்டு கேக்கலாம் என தெரிவித்தார்.